Posts

Showing posts from June 12, 2019

61/610:-மடி இன்மை திருக்குறள்

Image
மடிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.திருமால் அளந்த உலக நிலமனைத்தும் சோம்பலற்ற மன்னனை வந்தடையும்.பாதங்களால் இந்த பூமியை அளந்த கடவுளின்  சிறப்பு செயல்கள் சோம்பல்  இல்லாத மன்னனை வந்தடையுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

61/609:திருக்குறள்- மடி இன்மை

Image
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக்கெடும்.சோம்பலை ஒழிப்பவன் தன் குடும்பத்தை நடத்துவதில் வந்த குற்றங்கள் நீங்கிவிடும்.சோம்பலும் தளர்வும் இன்றி வாழும் மனிதர்களின் வாழ்வில் வாழுகின்ற குடும்பங்கள் எந்த குறை குற்றங்களுமின்றி இந்த உலகில் வாழ்வை நாடத்துமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

61/608:திருக்குறள்-மடி இன்மை

Image
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.நல்லகுடுபத்தில் சோம்பல் புகுந்துவிட்டால் அக்குடிமக்களை பகைவர்கக்கு அடிமையாக்கிவிடும்.சிறந்த முயற்சியுடைய குடும்பத்தில் ஊசார் நிலை குறைந்து சோம்பலை தழுவிக்கொள்ளும் நிலையில் அந்த குடிமக்களை எதிரிகள் தங்கள் வசமாக்கிக்கொள்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

61/607:திருக்குறள்-மடி இன்மை

Image
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்  மடிபுரிந்து மாண்ட உஞற்றிலவர். சோம்பலை விருப்பி நல்லுழைப்பை கைவிட்டவர்  பலரால் இகழ்ந்தும்.கடிந்தும் பேசக்கேட்க நேரிடும்.மனிதர்களின் வாழ்வில் வேலைகளைக்கு செல்லாது சோம்பலில் வாழ்வை கழிக்க விருப்பும் மனிதர்களுக்கு கிடைத்த நல்ல வேலையை தங்கவைத்து கொள்ள முடியாமல் போகும் அதனால் நல்லுழைப்பு கெட்டுப்போகக்கூடிய வாய்பு உண்டு  இதனால் பல பிற மனிதர்களால் இழிவாக பேசப்படுவார்கள் வேலை வெட்டி இல்லாத மனிதர்களை இந்த உலகம் இகழ்வதைக் கேட்டு மனவருத்தமடைய  நேரிடுமென  எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

61/606:திருக்குறள்-மடி இன்மை

Image
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.அரசாள்பவரின் நல்லுறவும் செல்வமும் வந்தடைந்த பின்னும் சோம்பலுடையவன் பெரும் பயனடையான்.நாட்டை ஆளும் மன்னனின் நல்ல உறவும் ஆதரவும் செல்வங்களும் கிடைத்தாலும் சோம்பலுள்ள மனிதர்கள் என்றுமே பயனடையமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

61/605:திருக்குறள்-மடி இன்மை

Image
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.காலம் கடந்து செய்யும் இயல்பு மறதி சோம்பல் தூக்கம் நான்கும் கெட்டழிபவர் விரும்பி ஏறும் மறக்கலமாகும்.பின்பு செய்யலாம் என காலத்தையும் நேரத்தையும் கடத்தி செல்லும் இயல்புடைய மனிதர்கள் தூக்கம் சோம்பல் மறதி ஆகியவைகளை கெட்டழிவதற்காகவே தேர்ந்தெடுக்கும் பயணமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

61/604:திருக்குறள்-மடி இன்மை

Image
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மீண்ட உஞற்றிலவர்க்கு. சோம்பலில் வீழ்ந்து நல்ல முயற்சியை மேற்கோள்ளதவர்கள் குடும்பம் அழிந்து குற்றமும் பெருகும்.வாழ்கையில் உற்சாகமும் முயற்சியும் இல்லாத மனிதர்களிடம் சோம்பல் குடிகொள்ளும் அதனால் குற்றச்செயல்களும் அதிகரித்து குலத்தின் பெயரும் அழிந்துபோகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

61/603:மடி இன்மை திருக்குறள்

Image
மடிமடிக்கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும்  தன்னினும் முத்து.சோம்பலை உடம்பிற்கொண்டு வாழும் அறிவற்றவர் பிறந்த குடும்பம், அவருக்கு முன் அழியும். முயற்சிகள் இல்லாமல் சோம்பலுடன் உடலை கொண்டு வாழுகின்ற அறிவிழந்த மனிதர்களினின் குடும்பங்கள் அவர்களின் முன்னே அழிந்துபோகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

61/602:திருக்குறள்-மடி இன்மை

Image
மடியை மடியா ஒழுக்கல் குடியைக் குடியாக வேண்டுபவர். தன் குடும்பம் மேலும் சிறந்தது  நல்ல குடியாக விரும்புபவர் சோம்பலை தவிர்த்து முயற்சியை மேற்கொள்வர்.தனது குடும்பம் சமூகத்தில் சிறந்த குடியாக விளங்க களைப்படையாமல் முயற்சிகள் எடுத்துக்கொண்டு முன்னேறிச் சென்றால் சமூகத்தில் சிறந்த குடும்பமாக வாழலாமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

61/601:திருக்குறள்-மடி இன்மை

Image
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.குடி எனப்படும் அனையாத விளக்கு மாசு என்னும் சோம்பல் சேர்ந்து மங்கினையந்து விடும்.மனிதர்கள் எந்த இனத்தில் பிறந்தாலும் அந்த இனத்தின் அனையாத தீபமாக வேண்டும் அதன் பெருமைகளை காக்கவேண்டும் அதில் முயற்சி இல்லாத தன்மை எற்பட்டால் எக்குடியில் பிறப்பினும் அந்த குடியின் ஒளிமாயமான எதிர்காலம் அழித்து விடுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .