Posts

Showing posts from September 30, 2020

120/1193:தனிப்படர் மிகுதி

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.காதலரால் எப்பொழுதும் காதலிக்கப் பட்டார்க்கு வாழ்கின்றோம் என்னும் பெருமிதம் பொருந்தும்.ஆணும் பெண்ணும் ஒருவரைய்யொருவர் காதலித்து காதலில் நிறைவுகண்டு வாழும்போது அந்த வாழ்வினில் காதலால் சுகமடைந்து இந்த உலகில் வாழ்கிறோம் என்ற ஒரு மகிழ்சி இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

120/1192:தனிப்படர் மிகுதி

வாழ்வார்க்கு வாம் பயந்ததற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.காதலிக்கு காதலர் காட்டும் அன்பானது உழவர் எதிர்பார்த்த மழை பெய்தது போலும்.விரும்பிய பெண் விரும்பிய ஆணுக்கு காட்டும் காதல் விருப்பமானது காமக்காரர் எதிர்பார்த்து காத்திருந்த பருவ மழை பொழிந்தது போலகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

120/1191:தனிப்படர் மிகுதி

Image
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றாரே காமத்துக் காழில் கனி. நாம் காதலிப்பவர் நம்மை காதலித்தால் கொட்டையற்ற காமப் பழம் பெற்றதுபோலும்.காதலில் விருப்பியவர்கள் விரும்பிய பெண்ணையோ அல்லது ஆணையோ விரும்பி நேசித்தால் நேசித்தவர் கிடைத்து விட்டால் விதையின்றி சுகமான இன்ப பழத்தை பெற்றதுபோல் அதில் தனி இனிமையான விருப்பமுண்டாகுமெ எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.