Posts

Showing posts from May 9, 2019

57/570:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலைக்கும் பொறை.கல்வியறிவற்றவர்களை கொடுங்கோல் மன்னன் செயல் புரிய அமர்த்திக் கொள்வான் இவர்களை விட இப்பூமிக்கு பாரம் வேறில்லை.படிப்பறிவில்லாதவர்களை அரசாங்க வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுத்திக்கொள்வது படிக்காதவர்களை விட இந்த பூமிக்கு பாரமாவது வேறு எவருமில்லையென  எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

57/569:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.போர் வரும் முன் அரணிட்டுக்காத்து கொள்ளாத மன்னன் வந்த பின் அஞ்சி தோல்வியுறுவான்.நாட்டில் போர் வர முன்னரே பாதுகாப்பை பலப்படுத்தாத அரசாங்க ஆளுனர் வந்த பின்னர் அஞ்சத்தினாலேயே தோல்வியை தழுவிக்கொள்வார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

57/568:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு.அரசன் அமைச்சரை கலந்துரையாற்றாது செய்து  வரும் துன்பத்தைக் கண்டு சினம் கொண்டால் அவன் செல்வம் சிறுத்து விடும்.நாட்டை ஆளும் அரசாங்க ஆளுனர் ஏனை அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காது தானே தன் சினத்தால் சீறி முடிவுகளை எடுத்துவிட்டு அமைச்சர்களை குறை கூறிக்கொண்டு சினம்கொண்டால் எதிர் வரும் துன்பங்களில் அந்த நாட்டின் செல்வங்கள் மெதுவாக அழிந்து போகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

57/567:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.கடும் சொல்லும் குற்றத்தின் மிகுந்த தண்டனையும் அரசனது பகைவரை அழிக்கும் வலிமையை குறைக்கும் அறமாகும்.கடுமையாக நெறிப்படுத்தபடும் அரசும் குற்றங்களுக்கு அதி தீவிர தண்டனைகளை  வழக்கும் கெடுபிடியான போக்கும் அரச ஆளுனர்களின் எதிரிகளை அழிக்கும்  வலுவை குறைக்கும்  அறமாகுமெ எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

57:566:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

கடும்ஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் . கடும் சொல்லும் பார்வையும் உடைய மன்னரது செல்வம் நீடிக்காமல் அழிந்தொழியும்.கடுமையான பார்வையும் கடும்  போக்கான  அரசாங்கங்களின் செல்வங்கள் நிலைத்து நிற்காது அழிந்தொழிந்து போய்விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

57/565:திருக்குறள் -வெருவந்த செய்யாமை

அருஞ்செல்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேய் கண்டன்னது உடைத்து.காண்பதற்கரிய தருணத்தையும் கடுமையான முகத்தையும் உடைய மன்னனின் செல்வம் பேய் காத்தது போன்றதாகும்.மக்கள் காணும் போதுதெல்லாம் கடும் போக்கான முகத்தை காட்டுபவர்களின் செல்வங்கள் பேய் காத்த உடமைகள் போல் ஆகிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

57/564:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

இறைகடியான் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.மக்கள் எம்மன்னவன் கொடியோன் என்று கூறப்படும் மன்னன் ,ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.நாட்டில் வாழும் மக்கள் ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் கொடிய அரசாங்கமே என அழைத்தால் அரச ஆட்சிக்காலம் குறைந்து அரச நீர்வாகம் சீர்குலையும்  அத்துடன் ஆட்சியாளர்களும் அழிந்து போவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

57/563:திருக்குறள்- வெருவந்த செய்யாமை

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒரு வந்தம் ஒல்லைக் கெடும்.மன்னன் குடிகள் அஞ்சுமாறு செயல்களை செய்வானாயின் அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.நாட்டில் வாழும் மக்கள் வாழ்வதற்கு அஞ்சினால் அரசாங்கத்தின் ஆட்சி  நல்லதாக இல்லையென்ற முடிவாகும் விரைவில் ஆட்சியில் இருக்கும் அரசு பதவியிறக்கி புதிய அரசு பதவிக்கு வரலாம் என எதிர்பார்க்கலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

57/562:திருக்குறள் - வெருவந்த செய்யாமை

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர்.செல்வம் நீங்காமலிருக்க விரும்பும் மன்னன் தண்டனையளிக்கும் போது அதிகம் தண்டிப்பது போல் காட்டி அளவுடன் தண்டிக்கவேண்டும்.நாட்டின் செவ்வ செழிப்பு குறையாமல் இருக்க விருப்பும் அரசாங்கம் நாட்டின் பொது மக்களுக்கு தண்டனையளிக்கும் போது அதிக தண்டனை அழிப்பது போல தோற்றுவித்து அளவுடன் தண்டிப்பது நீண்ட காலம் நாட்டை ஆள  அனுமதி கிடைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

57/561:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்சொல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.ஒருவன் குற்றம் செய்தபோது அக்குற்றத்தை ஆராய்ந்து மேலும் குற்றம் புரியாதவாறு தண்டனை வழங்குதல் மன்னன் கடமை.ஒரு நாட்டில் வாழும் மக்கள் குற்றம் புரிந்த போது அந்த குற்றத்தின் பிழைகளை தீர விசாரித்து இனி வரும் காலங்களில் குற்றங்களை செய்யாத வண்ணம் தண்டனையை வழங்குதல் அரச ஊழியர்களின் கடமையாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.