Posts

Showing posts with the label 125/1250:நெஞ்சோடு கிளத்தல் திருக்குறள்

125/1250:நெஞ்சோடு கிளத்தல்

Image
125/1250: திருக்குறள்: துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து  உடையேமா இன்னும் இழத்தும் கவின். பொருள்: எம்மைப் பொருளாகக் கருதிக் கூடாமல் பிரிந்து சென்ற தலைவரை இன்னமும் நாம் எம் நெஞ்சத்தில் நினைத்துக் கொண்டிருந்தால், எஞ்சியிருக்கும் சிறிதளவு உடலழகையும் நாம் இழக்க வேண்டியதுதான். விரிவாக்கம்: தன்னைப்பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், தழுவி மகிழாமல் விட்டுப் பிரிந்து சென்ற தலைவனின் இரக்கமற்ற தன்மையை எண்ணித் தலைவி வருந்துகிறாள். "நம்மைப் பற்றி நினையாமல் பிரிந்து சென்றவனை மறந்துவிடுவதுதான் நல்லது. அப்படிச் செய்யாமல், இரக்கமில்லாத அவனை இன்னமும் நம் நெஞ்சில் சுமந்துகொண்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தால், பிரிவின் துயரத்தால் இப்போது நம்மிடம் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச உடலழகும் பொலிவும் முற்றிலும் அழிந்து போகும்" என்று தன் மனதிற்கு அறிவுறுத்துவது போலத் தலைவி தன் ஆற்றாமையை நயம்பட எடுத்துரைப்பதாக இக்குறள் அமைகின்றது. English Translation: Thirukkural: Thunnaath Thurandhaarai Nenjaththu Udaiyaemaa Innum Ezhaththum Kavin. Meaning: If I continue to cherish in my heart the one who left without even drawi...