Posts

Showing posts from February 18, 2020

99/990:திருக்குறள்-சான்றாண்மை

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலைந்தான் தாங்காது மன்னோ பொறை.நிறைகுணம் உடையவர் தன்னுடைய தன்மையில் குறைவாராயின் பூமி அவர் பாரத்தைத் தாங்காது.அறிஞர்கள் தங்களுடைய சிறந்த நிலைகளிலிருந்து குறைந்த நிலைக்கு மாறுவார்களானால் இந்த உலகம் அவர்களை தாங்கிக்கொள்ளாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை

99/989:திருக்குறள்-சான்றாண்மை

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாமைக்கு அழி எனப்பட்ட வார். சால்பாகிய கடலுக்கு கரையானவர் அழிவு காலம் உண்டானாலும் ஒழுக்கம் தவறார். வாழ்வினில் தங்களின் கடமைகளை சரிவரச்செய்கின்ற மனிதர்களுக்கு உலகில் அனைத்து கடல்களும் வற்றும் நிலை வந்தாலும் அந்த காலத்தில் கூட தங்களின் நிலையை மாற்றிக்கொள்ளாது கடமைகளை தவறாது செய்துகொண்டிருப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை

99/988:திருக்குறள்-சான்றாண்மை

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். நிறைகுணம் ஒருவனுக்கு உறுதியாகுமானால் வறுமை அவர்க்கு இழிவாகாது. வாழ்வினில் நற்குணத்தை மேன்மையாக கொண்டவர்களுக்கு இல்லாமை என்பது இழிவாகாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

99/987:திருக்குறள்-சான்றாண்மை

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பபு.தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யாவிடின் நிறை குணத்தின் பயன் என்ன? பொல்லாங்கு செய்த மனிதர்களுக்கும் நன்மையே செய்வேண்டியது நல்ல மனம் உள்ள மனிதர்களின் கடமையாகும் அப்படி இல்லாவிட்டால் நிறைந்த குணம் இருந்தும் அதனால் சமுதாயத்திற்கு என்ன பயன் ? எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

99/986:திருக்குறள்-சான்றாண்மை

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். தோல்வியை தாழ்ந்தவரிடத்திலும் ஒத்துக்கொள்வது நிறை குணத்தின் உரைக்கல் எனப்படும். எல்லா தகுதிகளுமிருந்தும் தகுதிகளே இல்லாதவர்களிடத்தில் தோல்வியடையும் போது அவைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனம் உறுதி இருப்பவர்களின் மனநிலையே சிறப்பான வாழ்வியலேன எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை

99/985:திருக்குறள்-சான்றாண்மை

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.காரியம் முடிப்போரது திறமை பணிந்துபோதல் அதுவே பகைவரை நண்பராக்கும் கருவி.இந்த உலகில் வாழுகின்ற மனிதர்களே எக்காரியமும் நிறைவேறவேண்டுமென்றாலும் பணிவின் திறமை கொண்டே எதிரிகளையும் தோழர்களாக்கும் கருவியே வாழ்க்கைக்கு மிகச்சிறந்ததென எடுத்துரைக்கிறது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் .

99/984:திருக்குறள்-சான்றாண்மை

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. தவம் என்பது எவ்வுயிரையும் கொல்லாமை பிறர் குறையை கூறாமை சான்றாண்மை எனப்படும்.நல்லமனம் சிறந்த வாழ்வியல் என்பது பிறர் உயிரை கொல்லாமை மற்றவர்கள் புரியும் தவறுகளை சொல்லிக்காட்டாமல் வாழ்வதே தனிச்சிறப்பு எனப்படுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

99/983:திருக்குறள்-சான்றாண்மை

அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்.அன்புடைமை நாணம் பொதுநலம் இரக்கம் வாய்மை ஐந்து பல குண நிறைவு என்ற கட்டத்தின் தூண்களாகும்.அன்பும் வெட்கமும் பொதுசேவையும் உண்மையும் கருணையும் என்கின்ற ஐந்து விடயங்களும் மனிதனுக்குள் வந்து விட்டால் மனிதனின் வாழ்வியலில் மனிதானாக வாழ்கிறான் என்ற நிலை உருவாகிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

99/982:திருக்குறள்-சான்றாண்மை

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் இன்று.சான்றோர்கள் சிறப்பு குணநலமே மற்ற சிறப்பு எவ்வகை நன்மையும் தாராது.அறிஞர்களின் சிறந்த குணங்களே சிறப்பான மதிப்புகுரியது மற்றவை எந்த விதத்திலும் நல்லவைகளை வழங்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

99/981:திருக்குறள்-சான்றாண்மை

Image
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. தம் கடமைகள் அறிந்து குண நிறைவு கொண்டவர்க்கு நல்ல முயற்சிகள் எல்லாம் கடமைகள் என்பார்.மனித வாழ்வினில் தினமும் பல கடமைகள் இருக்கும் அவற்றை தெரிந்து சமுதாயத்திற்கு ஏற்றப்போல் முழுமனநிறைவுடன் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வாழ்நாளின் செய்யவேண்டிய கடமைகள் என கூறுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.