Posts

Showing posts from September 10, 2019

75/750:திருக்குறள்-அரண்

Image
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை நல்லாட்சி இல்லாத நாட்டிற்கு.எல்லா வளங்களும் இருந்தாலும் அதில் பயனில்லை நல்ல அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அமையவிட்டால் அந்த நாடு எப்போது சிறந்ததாக விளங்கபோவதில்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

75/749:திருக்குறள்-அரண்

Image
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண். போர் முனையில் பகைவர் ஒடுமாறு செய்யும் போர் செயலால் பெரும் சிறப்புடையதே அரண்.எதிரிப்படைகளை போர்முனையில் வெற்றி கொள்ள அரணுக்குள் இருந்துகொண்டே ஆயுதங்களால் தாங்கி அழித்து விடக்கூடிய அரணாக அமைந்தால் அதுவே உலகில் சிறந்த அரணாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

75/748:திருக்குறள்-அரண்

Image
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்.வலுவாகச் சூழ்ந்து வளைத்தவரையும் அஞ்சாது நின்று போர் புரிந்து வெல்லும் படி அமைந்தது அரண்.சுற்றிவளைக்கும் பலமான எதிரிப் படைகளை அரணுக்குள் இருந்தவாறே எதிர்த்து போராடி வெற்றி கொள்வதற்கு ஏற்ற அரணனே சிறந்த அரணாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

75/747:திருக்குறள்-அரண்

Image
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்.முற்றுக்கையிட்டு சூழ்நதோ அல்லது சூழாது திடீரெனத் தாக்கியோ வஞ்சித்தோ பிடிப்பதற்கரியதாக இருப்பது அரண். சுற்றி வளைத்தோ வளைக்கமலோ சூழ்ச்சிகளினால் வஞ்சிக்கப்பட்டோ திடீரென தாங்குதல்களை மேற்க்கொண்டோ தாங்கி அழிக்க முடியாத்தே உலகில் சிறந்த அரணாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

75/746:திருக்குறள்-அரண்

Image
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்.வேண்டிய எல்லா பொருட்களும் உடையதும் போர் செய்ய உதவும் நல்ல வீரரை உடையது அரண்.போருக்கு தேவையான அனைத்து பொருட்களும் உணவு நீர் அனைத்தையும் கொண்டும் களத்தில் சிறந்த போர்யுக்திகளில் சிறந்த வீரர்களும் இருப்பதே தலைசிறந்த களமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

75/745:அரண் திருக்குறள்

Image
கொளக்கரதாகய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்.கைப்பற்றுவதற்கு அரிதாய் உள்ளே உணவுப்பொருட்களை உடையதாய் வீரர்கள் போர் புரிவதற்கு ஏதுவாய் இருப்பதே அரண்.எதிரிபடைகளால் நாட்டை முற்றுகையிட முடியாதபடியும் நாட்டில் வாழுகின்ற பொதுமக்களுக்கும் அரச படையினருக்கு உணவு ,நீர் , தேவையான ஆயுதங்களையும் கொண்டு களத்தில் நிலைத்து நின்று போர் புரியவும் எதிரிகளை நிலைகுலைய செய்வதற்கு ஏற்றபடி அமைந்திருக்கும் அரணனே சிறந்த அரண் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

75/744:திருக்குறள்-அரண்

Image
சிறுகப்பிற் பேரிடத்ததாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்.காக்கும் இடம் சிறிதாகவும் பரந்து இடத்தை உடையதாகவும் பகைவரின் எழுச்சியை அழிப்பதாகவும் உள்ளதே அரண்.காவல் காக்கும் இடம் படைகளின் கட்டுப்பாட்க்குள் அடங்ககூடிய இடமாகவும் அகண்டு விரிந்த நிலப்பரப்பை கொண்டதாகவும் எதிரிகளின் முன்னேற்றத்தை தடுத்து அவர்களை அழித்தொழிக்ககூடியதே சிறந்த அரணானதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

75/743:திருக்குறள்-அரண்

Image
உயர்வகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவரன் என்றுரைக்கும் நூல்.உயர்ந்தும் அகண்றும் வலிமையும் பகைவரால் கடப்பதற் கரியதும் என்ற நான்கும் உடையது அரண் என நூல்கள் கூறும். உயர்ந்த மலைகளை கொண்ட பூமியும் அகன்டு விரிந்த நிலப்பரப்பும் நிறைந்த உறுதியான புவியியல் அமைப்பையும் எதிரிகளால் எளிதில் கடந்து சென்று விட முடியாத நில வளத்தின் பூகோள ரீதியான நான்கு அமைப்பும் அமைந்ததே சிறந்த அரணுக்கான தனிச்சிறப்புகளென உலகில் உள்ள நூல்கள் கூறுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

75/742:திருக்குறள்-அரண்

Image
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்.நீர் நிறைந்த அகழியும் பரந்த நிலமும் மலையும் அழகிய நிழற்காடும் உடையது கோட்டை.நீர் நிலைகள் நிறைந்த குளம் அகண்ட அகழியும் நீண்டு அகண்ட நிலப்பரப்பையும் வான் உயர்ந்த மலைகளையும் இயற்கை பசுமை நிறைந்த காடுகளையும் கொண்டதே சிறந்த கோட்டைகான தளமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

75/741:திருக்குறள்-அரண்

Image
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்.படையெடுத்து போர் செய்வார்க்கும் கோட்டை மதில் வேண்டும் பகைவர்க்கு அஞ்சி தற்காப்பவர்க்கும் கோட்டை மதில் வேண்டும்.படைகொண்டு போர் தொடுப்போருக்கு சிறந்த கோட்டையும் உயர்ந்த மதிலும் இருந்தல் அவசியமாகும் எதிராளிகளுக்கு பயந்து தற்பாதுகாப்புக்காக பதுங்கி கொண்டு தாக்குதலை நடந்த சிறப்பான உறுதியுடைய அரணும் அதற்கு இணையான கோட்டையும் அமைதல் அவசியமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.