Posts

Showing posts from November 6, 2018

40/397:திருக்குறள்-கல்வி

40/397:யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லா வாறு. கற்றவர்க்கு எந்தநாடும் எந்த ஊரும் தன்னுடையது போன்றிருக்க இறக்கும் வரை கல்லாதிருப்பது ஏன் ? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்பதுபோல உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாடோ அல்லது ஊரோ தங்களுடையது போல இலகுவாக இருக்குமாம் இதை தெரிந்த மனிதர்கள் சாகும் வரை கல்வியை கற்காமலே வாழ்வதன் வாழ்வுதான் என்ன ? என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

40/396:கல்வி திருக்குறள்

40/396:தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.மணற்கேணி தோண்டத்தோண்ட நீர் தருவது போல் நூல்கள் கற்கக்கற்க அறிவு பெருகும்.நீர் ஊற்று இருக்குமிடத்தில் தோண்டினால் நீர் வரும் அதுபோல படித்த மக்களிடத்தில் கேட்டுப்படிக்க தொடங்கினால் கல்வியூறும் அதேபோல பல நூல்களை புரட்டிப்படித்தால் நூல்களின் அறிவு இந்த உலகில் களஞ்சியமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

40/395:திருக்குறள்-கல்வி

40/395:உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லாதவர். செல்வந்தர் முன் ஏழை போல் கற்றவர் முன்பணிந்துநின்று கற்றவரே மேலானவர் கல்லாதவர் சிறியோர். பணக்காரர்கள் முன் ஏழைகள் ஏழைகளே அதேபோல் படித்தவர்கள் முன் படிக்காதவர்கள் படிப்பறிவு இல்லாத மனிதர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

40/394:திருக்குறள்-கல்வி

உவப்பத் தலைக்கூடி உள்ளம் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.மகிழுமாறு பழகி நினைத்திருக்கும் படியாக பிரிவர் இதுவே கற்றவர் இயல்பு.மனிதர்கள் வாழ்வுதனில் மனிதர்களை சிரிக்க சிரிக்க பேசி பழகி மகிழ்வடைய வைத்து விட்டு பிரிந்தபோதும் அவர்களையே நினைத்திருக்கும்படி செயல்களை செய்து விட்டு செல்லும் மனிதர்களே உலகில் படித்தவர்களின் இயல்பான இயல்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.