54/533:திருக்குறள்-பொச்சாமை
பொச்சாப்பார்க்கும் இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு.மறதி உடையவர்க்கு புகழில்லை என்பது உலகில் எத்தகைய நூலறிவு பெற்றோரும் ஒப்புக்கொண்ட முடிவாகும்.ஞாபகமறதி உடையவர்களுக்கு இந்த உலகில் பேரும் புகழும் கிடைப்பதில்லை அவர்கள் இந்த உலகில் எவ்வளவு நூல்களை கற்றிருந்தாலும் ஞாகமில்லாத வாழ்வில் சிறப்பில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.