Posts

Showing posts from July 15, 2019

66/660:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட் காலத்துள் நீர் பெய்திரீஇ யற்று.தீயவழிப் பொருளைக் காத்தல் என்பது கூடா மண் பானையில் நீரை ஊற்றிக்காப்பது போலாகும்.கூடாத வழிகளில் சேர்ந்த செல்வங்களை பாதுகாப்பதென்பது சரியில்லாத மண் பானையில் ஊற்றி வைக்கும் நீரை போன்றதாகும் வாழும் சமுகத்தால் தீயவழியில் வந்த பொருட்களை கண்டு பறிமுதல் செய்யக்கூடிய ஆபத்துகளும் அதற்கான தண்டனைகளும் தொடரக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

66/659:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை.பிறர் அழுப்படி பெற்ற பொருள் நாம் அழும்படி அழிந்து விடும் நல்வழிப் பொருள் இழந்தாலும் பின்பு பயன் தரும்.மற்றவர்கள் கண்ணீர் விடும் படி சேர்ந்த செல்வங்கள் சேர்ந்தவர்களின் கண்முன்னேயே அழிந்து போகும் ஆனால் என்றுமே சிறந்த வழியில் சேர்ந்த செல்வங்கள்  கைகளை விட்டு போனாலும் மீண்டும் ஒரு நேரத்தில் பயன்தந்து உதவுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

66/658:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
கடிந்த குடிந்தொர் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.நல்லோர் தவிர்த்த செயலை விலக்காது செய்தவர்க்கு செயல் முடிந்தாலும் பின் துன்பமே தரும்.நல்வழிகள் இருக்க அவை அனைத்தையும் தவிர்த்துவிட்டு கூடாதவழிகளையே தேர்ந்தெடுத்து சில காலங்கள் புகழ்பெற்று வாழ்ந்தாலும் அந்தந்த நேரங்களில்  நினைத்தவைகள் நடந்து  முடிந்தாலும் பின் ஒரு காலத்தில் துன்பங்களே வந்து சேருமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

66/65:வினைத்தூய்மை திருக்குறள்

Image
66/657:பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரேவே தலை.பெரியோர் இழிவான் செயல் புரிந்து பெறும் செல்வத்தை விட நற்செயல் வறுமையே மேலானது. வாழ்வினில் உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்கள் கள்ளத்தனமான இழிச்செயல்களில் ஈடுபட்டு பணத்தை சேர்த்து சொகுசாக வாழ்ந்து உலகிற்கு காட்டுவதைவிட வறுமையோடு ஆடம்பரமில்லாமல் அமைதியான சிறப்புமிக்க வாழ்வு வாழ்வதே மேலானதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

66/656:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
ஈன்றற் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.தன்னை பெற்றதாய் பசித்திருக்க பார்க்க நேரிடினும் உயர்ந்த அறிவுடையவர் பழிக்கும் செயலை செய்தலாகாது.தாய்யாகியவள் சாப்பாட்டுக்கு வழியின்றி பசியினால் வாடினாலும் உயர்ந்த பண்புள்ள மனிதர்கள் இந்த உலகம் பார்த்து பழிக்கு வகையில் வாழ்க்கையை நடத்தக்கூடாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

66/655:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
எற்றென்று இரங்குவ செய்யற்க செயவானேஸ் மற்றன்ன செய்யாமை நன்று.எத்தனை செயலை செய்து விட்டோம் என்றும் வருந்தும் செயலை  செய்தலாகா அவ்வாறு செய்துவிட்டால் மீண்டும் செய்யாதிருந்தல் நன்று.எவ்வளவு தவறுகளை இதுவரை நாட்களும் செய்துகொண்டிருக்கிறோம் என்று கவலை படுவதை விட இனிமேலும் புதிய தவறுகளை செய்யாதிருப்பதே வாழ்வினில் சிறப்பாகும் என நினைத்து வாழ்வதே மனித வாழ்வியலுக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

66/654:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
இடுக்கண்  படினும் இளிவந்த செய்யார்  நடுக்கற்றகாட்சியவர். தெளிந்த அளிவுடையோர் தான் துன்பப்பட்ட நேர்ந்தாலும் இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார்.நல்ல அறிவுள்ள மனிதர்கள் தங்களின் வாழ்வில் துன்ப துயரங்களோடு வாழநேர்ந்தாலும் ஒருபோதும் கெட்ட செயல்களில் தங்களின் வாழ்வை இட்டுச்செல்லாமாட்டார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

66/653:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
ஒஒதல்ஙேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னுமவர்.மேன்மையுற வேண்டும் என்று  விரும்புவோர் தன் மதிப்பைக் குறைக்கின்ற செயல்களை செய்யாதிருக்கவேண்டும்.மனிதர்களின் வாழ்வில் நன்மதிப்பு என்பது மனிதர்களின் வாழ்வியல் நடைமுறையிலியே அடங்கியுள்ளது வாழ்வினில் நன்மதிப்புடன் வாழவேண்டுமென நினைக்கின்ற மனிதர்கள் நற்செயல்களை  புரிந்தே  தங்களின் நன்மதிப்புக்களை குறையாத வண்ணம் சமுதாயத்தில் வாழ்ந்திருத்தல்வேண்டும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

66/652:திருக்குறள்-வினைத்தூய்மை

என்றும் ஓருவுதல் வேண்டும் புகழோடு நன்றி பயவா வினை.புகழையும். நன்மையும்  தராச் செயலை என்றும் செய்யாமல் ஒழிக்க வேண்டும்.மனிதர்களின் வாழ்வில் நன்மையை புரிந்து புகழ்பெற்றுக்கொள்வது மனிதர்களின் வாழ்வின் சிறப்பாக கருதப்படுவார்கள் புகழையும் நன்மையையும் தராச்செயல்களை என்றும் செய்யாமல் இருப்பதே உங்கள் வாழ்விற்கு சிறப்பென எடுத்துரைக்கிறது திருக்குறள். தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

66/651:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.நல்லத்துணை நல்ல உயர்வைத்தரும்  நற்செயல் வாழ்வில் வேண்டிய எல்லாந்தரும்.உலகவாழ்க்கைதனில் நற்துணையை அடைத்துவிட்டால் வாழ்க்கையில் நன்மைதரும் நற்செயல்களை  புரிந்து வந்தால் வாழ்வினில் எல்லாம் வந்து சேர்ந்து வாழ்க்கையை மகிழ்விக்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .