Posts

Showing posts with the label 97/964 திருக்குறள் மானம்

97/964:திருக்குறள்-மானம்

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப்போல் இழக்கப்படுவர்.உயர்ந்த பண்பிலிருந்து மனிதர்கள் கீழ் இறங்க வேண்டிய நிலை வாழ்வியல் வரும்போது உதிர்ந்து வீழ்ந்த தலைமுடியைப்போல் சமுதாயத்தில் வாழ்ந்த வாழ்வினை இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.