97/962:திருக்குறள்-மானம்
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டும் பவர்.புகழோடு மானமும் வேண்டுபவர் புகழில்லா இழிவான செயல் செய்யார்.மனிதர்களின் வாழ்வில் புகழ்தேடுவதும் புகழைத்தேடி பல புரட்சிகரமான விடயங்களில் ஈடுபடுவதும் மனிதர்களின் வாழ்நாளை பயன்படுகின்றனர் இப்படி பயன்படுத்துகின்றவர்கள் சீரினும் சிறந்தவற்றையே செய்தல் வேண்டும் குலத்தின் மானமும் வேண்டுபவர்கள் புகழில்லா இழிவான செயல்களை என்றும் சமுதாயத்தில் செய்யமாட்டார்கள் .புத்தியுள்ள மனிதர்கள் இந்த உலகத்தை ஒத்தே வாழ்கை நாடத்துவார்கள் தன்னையும் தன் சமுதாயத்தையும் நல்வழியில் நடத்திச்சென்றே பேரையும் புகழையும் அடையமுடியும் அத்திறன் இல்லாதார் வாழ்வில் தோல்வியையே சந்திக்கநேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.