Posts

Showing posts with the label 123/1228:பொழுதுகண்டு இரங்கல் திருக்குறள்

123/1228:பொழுதுகண்டு இரங்கல்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. தீயைப்போலச் சுடுகின்ற மாலைப் பொழுதில் இடையன் குழலோசை தூதாக வந்து என்னைக் கொல்லும் படை போலானது. நெருப்பாக இருப்பதுபோல பொன்மாலைப்பொழுதில் இடையன் குழலோசை தேடிவந்து உயிரை கொல்லும் படையைபோலானதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.