Posts

Showing posts from August 30, 2019

74/740:திருக்குறள்-நாடு

Image
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை நல்லாட்சி இல்லாத நாட்டிற்கு.எல்லா வளங்களும் இருந்தாலும் அதில் பயனில்லை நல்ல அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அமையவிட்டால் அந்த நாடு எப்போது சிறந்ததாக விளங்கபோவதில்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

74/739:திருக்குறள்-நாடு

Image
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.தன்னிறைவுடைய வளமான நாடே நாடு எனப்படும் , பிற நாட்டை எதிர் நோக்கும் நாடு நாடல்ல. வாழுகின்ற மக்களின் உழைப்பால் தன்னிறைவு காணும் நாடு நாடல்ல இயற்கை வளத்தாலும் இயற்கையிலேயே சிறந்து மக்களுக்கு தேவையானவற்றை வழங்ககூடிய நாட்டையே வளமான நாடு என கருதமுடியுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

74/738:திருக்குறள்-நாடு

Image
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. நோயின்மை பொருள் , விளைச்சல் , இன்பம் , காவல் என்ற ஐந்தும் நாட்டிற்கு அணியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு நோய்யற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் நல்ல விளைச்சலை தரக்கூடிய விவாசாய நிலப்பரப்பும் இன்பமான வாழ்வும் சிறந்த பாதுகாப்பும் இவை ஐந்தையும் கொண்ட நாடே உலகில் மிகச்சிப்பான நாடாக இருக்கமுடியுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

74/737:திருக்குறள்-நாடு

Image
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.வான் நீரும் மண் நீரும் , மலையும் அருவியும் அழியாக் கோட்டையும் நாட்டின் உறுப்புகளாம். நீண்ட கடல்பரப்பும் அகண்டு விரிந்த நீளமான நதிகளும் விவாசயத்துகான சிறந்த நிலவளங்களும் வான் மழையை ஏற்படுத்தக்கூடிய சிறந்த இயற்கை சூழலை கொண்ட பசுமையும் வான் உயர்ந்த மலைகளும் மலைச்சாரல்களில் இருந்து வீழ்கின்ற நீர் வீழ்ச்சிகளும் அசையாமலும் அழியாமலும் நிமிர்ந்து நிற்கின்ற கோட்டைகளுமே ஒரு நாட்டின் அவயவம்களாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

74/736:திருக்குறள்-நாடு

Image
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை.பகைவரால் தீமையற்றும் அவ்வாறு கேடு வந்தாலும் வளம் குறையாது என்ற நாடே சிறந்த நாடு .எதிரிகளால் தீமையில்லாமல் போனாலும் அப்படியே தீமைகள் வந்து சேர்ந்தாலும் அதையும் தாங்கிகொண்டு நாட்டின் வளங்களை குறைத்து கொள்ளாது சீரமைத்து கொண்டு மக்களையும் வறுமையில் வாட விடதா நாடே தரணியில் சிறந்த நடேன எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

74/735:திருக்குறள்-நாடு

Image
பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கு கொல்குறும்பும் இல்லது நாடு . பலபிரிவு , உட்பகை அரசினை அழிக்கும் கொள்ளக் கூட்டமும் இல்லாதது நாடு. உட்பகைகள் காரணமாக நாட்டுக்குள் பிரிவினைகளை தூண்டிவிட்டு பலவிதமான கிளர்ச்சிகளை தூண்டும் கிளர்ச்சிகாரர்கள் இல்லாத நாடே சிறந்த நாடாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

74/734:திருக்குறள்-நாடு

Image
உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. தீராப்பசியும் நீங்கா நோயும் அழிக்கும் பகையும் இல்லாதிருப்பது நாடு. பஞ்சமும் பசியும் ஏழ்மையும் நோய்களும் யுத்தங்களுமில்லாத சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாடே மக்களுக்கு ஏற்ற நாடாக இருக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில்.

74/733:திருக்குறள்-நாடு

Image
பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி அருங்கேட்டால் இறையொருங்கு நேர்வது நாடு.வரும் பாரமெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியைல்லாம் கொடுப்பதுவே நாடு. வருகின்ற புதிய புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு அரசாங்கத்துக்கு மக்களால் செலுத்தவேண்டிய வரியை பெற்றுக்கொண்டு அரசளுனர்களையும் சிறந்த வழிகளில் சிறப்பித்து நடாத்தி செல்லும் நாடே நாடாக இருக்கமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

74/732:திருக்குறள்-நாடு

Image
பெரும்பொருளால் பெட்டக்க தாகி இறைவற்கு ஆற்ற விளைவது நாடு.அதிகப் பொருளிருப்பதால் விரும்பத்தக்கதும் கேடில்லாத்தும் மிக விளைவதும் நாடு.அதிமாக செல்வங்கள் இருக்கும் நாடாகவும் உலக நாட்டு மக்களாலும் அரசாங்கங்களாலும் விரும்பத்தக்க நாடாகவும் ஏனைய நாடுகளுக்கும் மக்களுக்கும் கேடில்ல நாடாகவும் அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய விவாசாய நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ள நாடே உலகில் சிறந்த நாடாக கருதப்படுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்

74/731:நாடு திருக்குறள்

Image
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.குறைவில்லா விளைச்சலும் அறநெறியறிந்தவரும் குறைவில்லா செல்வமுடையவரும் வாழ்வது நாடு.செழிந்த விவசாய வளமுள்ள விளைச்சல் கொண்ட நாடும் அறநெறிகள் அறிந்த மக்களும் குறையில்லா செல்வந்தர்களும் வாழும் நாடே உலகில் சிறந்த நாடு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.