122/1217: கனவு நிலையுரைத்தல்
நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது.நனவில் வந்து அருள் செய்யாத கொடியவர் கனவில் வந்து நம்மை வருத்துவது எதனாலோ?நனவிருக்கும்போதே வந்து சந்தித்து பேச மனமில்லாதவர் உறங்கும்போது கனவில் வந்து பேசநினைப்பதும் மனதை வருத்துவதுமெனோ என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.