Posts

Showing posts from May 10, 2026

40/391:கல்வி திருக்குறள்

Image
40/391:கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.கற்கவேண்டிய நூல்களை தெளிவாகக் கற்று அந்நூல் நெறிப்படி வாழவேண்டும். கற்பவைகளை கற்கவேண்டும் அதுவும் நெறிப்பட கற்றல்வேண்டும் கற்றநூல்களின் படி சிறந்த வாழ்வியலை வாழவேண்டும் அதுவே இந்த உலகில் சிறப்பைத்தரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

39/388: இறைமாட்சி திருக்குறள்

Image
39/388: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்றும் வைக்கப்படும்.முறையோடு காக்கும் மன்னனை மக்கள் இறைவனாகக் கருதுவர்.மக்களை நல்லாட்சி செய்யும் அரசாங்கத்தை மக்கள் போற்றுவார்கள் நல்லாட்சியாக நடத்தப்பட்டிருந்தால் அதே அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரலாலம் மக்களின் வரவேற்ப்பை பெற்ற அரசாக விளங்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/389: இறைமாட்சி திருக்குறள்

Image
 39/389:செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைய வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.குறை கூற்றும் கேட்கின்ற பண்புள்ள மன்னது அரசின் கீழ் உலகம் தங்கும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் தேவைகளையும் குறைகளையும் கூற்றுகளை கேட்கின்ற பண்புள்ள அரசாங்கத்தை மக்கள் விரும்பி அதன் கீழ் இதுவே எங்கள் உலகம் என வரவேற்றுக்கொள்வார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

39/390:இறைமாட்சி திருக்குறள்

Image
  39/390: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேத்தர்க் கொளி. கொடுக்கும் தன்மை ,அன்பு ,நேர்மை, குடிகாத்தல் இந்நான்கும் உள்ளவன் மன்னர்க்கெல்லாம் ஒளியாவான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் வறுமையை போக்கி அனைத்து மக்களையும் மூன்று நேர உணவுகளை கொடுத்து தன் நாட்டு மக்கள் என்று கவனித்து நேர்மையான முறையில் தன் நாட்டு மக்களை பாதுகாத்து பசி பட்டினி இன்றி வாழவைக்கும் அரசே உலகில் சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

39/381:திருக்குறள் இறைமாட்சி

Image
39/381:படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.படை குடி பொருள் அமைச்சர்கள் நட்பு கோட்டை இவ்வாறும் உடையவன் அரசருள் சிங்கம் போன்றவன்.நல்லபடை ,நற்குடிமக்கள்,நற்செல்வம்,சிறந்தகல்வி அறிவு,அயல் நாடுகளுடனான நட்பு,சிறந்த அரண்,பணிவும் நற்பண்புகளுமுள்ள வீரமுடையவர்கள் இந்த உலகத்தை ஆளும் தகமையுடையவர்கள் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.  

39/384:இறைமாட்சி, திருக்குறள்

Image
  39/384:அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.அறநெறி தவறாது தீமைகளகற்றி .வீரம் தவறாது ஆள்பவன் அரசன்.ஒரு நாட்டை ஆழுமை செய்கின்ற அரசாங்கம் அறநெறி தவறாமல் ஆட்சி நடத்தல் வேண்டும்.அந்த நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு தீமைகள் செய்யாது மக்களை நல்வழிப்படுத்தி அரசாங்கம் நடத்தவேண்டும்.வீரம் தவறாது ஆளுமை நாடத்துகின்ற அரசுகள் சிறந்தவை அன்னிய நாட்டு படைகளுடன் போர்முனையில் வெற்றி கொண்டு ஆளுமை நிலைநாட்டுகின்ற அரசு சிறந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

40/392 :கல்வி திருக்குறள்

Image
 40/392:எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்துமாகிய இரண்டும் வாழும் மக்களுக்கு கண்போன்றது.கல்வி என்பது மனிதர்கள் வாழுகின்ற சமுதாயத்திற்கு கண்போன்றது கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பளிக்கும் எண்ணையும் எழுத்தையும் மனிதகுலம் கற்றிருக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு . பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 

39/390:திருக்குறள் இறைமாட்சி

Image
39/390: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேத்தர்க் கொளி. கொடுக்கும் தன்மை ,அன்பு ,நேர்மை, குடிகாத்தல் இந்நான்கும் உள்ளவன் மன்னர்க்கெல்லாம் ஒளியாவான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் வறுமையை போக்கி அனைத்து மக்களையும் மூன்று நேர உணவுகளை கொடுத்து தன் நாட்டு மக்கள் என்று கவனித்து நேர்மையான முறையில் தன் நாட்டு மக்களை பாதுகாத்து பசி பட்டினி இன்றி வாழவைக்கும் அரசே உலகில் சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

40/393:திருக்குறள் கல்வி

Image
40/393:கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.கற்றவரே கண்ணுடையவர் கல்லாதவர் முகத்தின் கண்கள் புண்போன்றது. கல்வியியலை கற்று தெளிவடைந்தவர்களே அறிவு கண் உள்ளவர்கள் கல்வியறிவில் தேர்ச்சி பெறாதவர்களின் முகத்தில் கண்கள் இருந்தும் இல்லாதவர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .  

40/394:திருக்குறள் கல்வி

Image
 40/394:உவப்பத் தலைக்கூடி உள்ளம் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.மகிழுமாறு பழகி நினைத்திருக்கும் படியாக பிரிவர் இதுவே கற்றவர் இயல்பு.மனிதர்கள் வாழ்வுதனில் மனிதர்களை சிரிக்க சிரிக்க பேசி பழகி மகிழ்வடைய வைத்து விட்டு பிரிந்தபோதும் அவர்களையே நினைத்திருக்கும்படி செயல்களை செய்து விட்டு செல்லும் மனிதர்களே உலகில் படித்தவர்களின் இயல்பான இயல்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

40/395 :திருக்குறள் கல்வி

Image
40/395:உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லாதவர். செல்வந்தர் முன் ஏழை போல் கற்றவர் முன்பணிந்துநின்று கற்றவரே மேலானவர் கல்லாதவர் சிறியோர். பணக்காரர்கள் முன் ஏழைகள் ஏழைகளே அதேபோல் படித்தவர்கள் முன் படிக்காதவர்கள் படிப்பறிவு இல்லாத மனிதர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

40/ 396 :கல்வி திருக்குறள்

Image
40/396:தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.மணற்கேணி தோண்டத்தோண்ட நீர் தருவது போல் நூல்கள் கற்கக்கற்க அறிவு பெருகும்.நீர் ஊற்று இருக்குமிடத்தில் தோண்டினால் நீர் வரும் அதுபோல படித்த மக்களிடத்தில் கேட்டுப்படிக்க தொடங்கினால் கல்வியூறும் அதேபோல பல நூல்களை புரட்டிப்படித்தால் நூல்களின் அறிவு இந்த உலகில் களஞ்சியமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.  

40/397: கல்வி திருக்குறள்

Image
40/397:யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லா வாறு. கற்றவர்க்கு எந்தநாடும் எந்த ஊரும் தன்னுடையது போன்றிருக்க இறக்கும் வரை கல்லாதிருப்பது ஏன் ? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்பதுபோல உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாடோ அல்லது ஊரோ தங்களுடையது போல இலகுவாக இருக்குமாம் இதை தெரிந்த மனிதர்கள் சாகும் வரை கல்வியை கற்காமலே வாழ்வதன் வாழ்வுதான் என்ன ? என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.  

35/341:துறவு திருக்குறள்

Image
 

40/398:திருக்குறள் கல்வி அதிகாரம்

Image
40/398:ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து.ஒர் பிறவியில் கற்ற கல்வி ஏழுபிறவியிலும் வந்து உதவும்.இந்த உலகில் மனிதர்கள் மனித வாழ்வினில் படித்தபடிப்பானது ஏழுழேழு ஜென்மங்களிலும் வந்து உதவி செய்யுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.  

1/2 :திருக்குறள் கடவுள் வாழ்த்து

Image
1/2: திருக்குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பொருள்: தூய அறிவு வடிவமாக விளங்கும் இறைவனின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன? (ஒரு பயனும் இல்லை.) விரிவாக்கம்: மனித வாழ்க்கையில் எத்தனை நூல்களைக் கற்றிருந்தாலும், நூலறிவை மட்டும் பெற்றிருந்தால் போதாது. தூய்மையான அறிவின் வடிவமாக விளங்கும் இறைவனை மனதார வணங்கி, அந்த நல்வழியில் நடக்கவில்லை என்றால், அவர் கற்ற கல்வியினால் எந்தப் பயனும் விளையாது என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. English Translation: Thirukkural: Katrathanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaar Enin. Meaning: What is the use of all the learning one has acquired, if they do not worship the sacred feet of the One who is the embodiment of pure knowledge? Explanation: Education and knowledge are meaningful only when they lead a person to humility and spiritual devotion. If a person acquires vast learning but fails to revere the Divine—the source of ultimate wisdom—all their education remains fruitless. ...

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

Image
1/1: திருக்குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. பொருள்: எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன; அதுபோல, இந்த உலகம் ஆதிபகவனாகிய இறைவனை முதலாகக் கொண்டு இயங்குகிறது. விரிவாக்கம்: உலகில் உள்ள மொழிகளின் அனைத்து எழுத்துக்களுக்கும் தொடக்கமாக 'அ' என்னும் அகர ஒலி எவ்வாறு அமைந்திருக்கிறதோ, அதுபோலவே பேரண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் வாழ்வியலுக்கும் ஆதிபகவனே முதன்மைக் காரணியாக விளங்குகிறான். இறைவனே அனைத்து இயக்கங்களுக்கும் தொடக்கமும் ஆதாரமும் ஆவான் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. English Translation: Thirukkural: Agara Mudala Ezhuthallam Aadhi Bhagavan Mudatre Ulagu. Meaning: As the letter 'A' is the starting point of all alphabets, so is the Primordial God the origin of the entire universe. Explanation: Just as every written language and sound begins with the fundamental vowel 'A', the existence and operation of the universe depend entirely on the Divine Creator. God stands as the supreme, foundational source for ...