Posts

Showing posts with the label 98/972 திருக்குறள் பெருமை

98/972:திருக்குறள்-பெருமை

பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். அனைத்து மக்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும் செய்கின்ற செயல் வேற்றுமையால் பெருமை சிறுமை என்ற இயல்புகள் வேறுபடும்.பிறக்கும் பிறப்பில் யாவரும் சமநிலையில் பிறந்திருந்தாலும் அவர்கள் செய்கின்ற தொழிலாலும் புத்தியின் விவேகத்தாலும் உயர்ந்த நிலையையும் தாழ்ந்த நிலையையும் வாழ்வினில் ஏற்ற வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.