4/37:திருக்குறள்-அறன் வலியுறுத்தல்
4/37: திருக்குறள்: அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. பொருள்: அறத்தின் வழி நடந்து வாழ்பவருக்குக் கிடைக்கும் பயன் இதுதானா என்று நூல்களைக் கொண்டு விளக்க வேண்டியதில்லை; பல்லக்கைச் சுமப்பவனுக்கும் அதில் அமர்ந்து செல்பவனுக்கும் இடையே உள்ள வேறுபாடே அதற்குச் சான்றாகும். விரிவாக்கம்: நல்வினையின் பயனை அறிய விரும்புவோருக்கு, பல்லக்கைச் சுமப்பவனின் உழைப்பும் அதில் ஏறிச் செல்லும் பயனாளியின் அமைதியான பயணமுமே நல்வினை-தீவினையின் விளைவை வெளிப்படையாக உணர்த்தும் சான்றாகும். மனிதர்கள் செய்யும் நற்செயல்களும் அறவழியும் அவர்களின் எதிர்கால வாழ்வையும் பிறவிகளையும் செழுமைப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம். English Translation: Thirukkural: Araththaaru Ithuvena Veandaa Sivigai Poruththaanodu Oornthaan Idai. Meaning: There is no need for verbal explanations to demonstrate the fruits of virtue; the contrast between the palanquin bearer and its rider is proof enough. Explanation: The visible diffe...