15/148:திருக்குறள்- பிறன் இல்விழையாமை
திருக்குறள்: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (குறள் 148 - அதிகாரம்: பிறன்இல் விழையாமை) பொருள்: பிறனுடைய மனைவியை விரும்பிப் பார்க்காத பெரும் ஆண்மை (மனக்கட்டுப்பாடு) சான்றோர்க்கு அறம் மட்டுமன்று; அது நிறைந்த ஒழுக்கமும் ஆகும். விரிவாக்கம்: அடுத்தவர்களின் மனையாளைத் தவறான எண்ணத்துடன் பார்க்காத மிகப்பெரும் துணிவும் மனக்கட்டுப்பாடும் நல்லவர்களுக்கு அறநெறி மட்டுமல்ல; அது சிறந்த பழக்கமாகி அவர்களுக்கு உயர்ந்த ஒழுக்கத்தையும் சிறப்பையும் கொடுக்கும் என்பதைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார். --- English Translation: Thirukkural: Piranmanai Nokkaadha Paeraanmai Saandrorkku Aranondro Aandra Ozhukku. Meaning: The great manliness (self-mastery) of not looking with desire at another's wife is not merely a virtue for the noble, but also a mark of complete and disciplined conduct. Explanation: Thiruvalluvar emphasizes that the moral courage and self-restraint required to never look covetously at another person's spouse goes beyond simple righteousness. For ...