Posts

Showing posts from September 13, 2018

11/110:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்ற கொன்ற மகற்க எவ்வகைப்பட்ட நன்மையை அழித்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து விடுபடவழியுண்டு தனக்கு செய்த நன்றியை மறந்தவனுக்கு அதிலிருந்து விடுபடவழியில்லை எப்படிப்பட்ட நன்மைகளை புரிந்தாவர்களுக்கும் பாவங்களில் இருந்து விடுபட்டுக்கொள்ள நல்ல வழிகள்உண்டு ஆனால் செய் நன்றி மறந்தவர்களுக்கு அந்த பாவத்திலிருந்து விடுபட வேறு வழியில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

11/109:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக்கெடும்.தனக்கு நன்மை செய்தவர் கொல்வது போன்ற தீமையை செய்தாலும் அந்த நன்மையை நினைக்கவே தீமைமறையும்.மனிதர்களே உங்களுக்கு யாராவது உதவி புரிந்திருந்தால் அவர்கள் எங்களின் உயிரை எடுப்பதுபோல் கோபம் கொண்டு தீமைகள் புரிந்தாலும் அவர்கள் அன்று செய்த உதவியை நினைத்து பாருங்கள் அவர்கள் செய்யவந்த தீமைகள் மறைந்து மனதிலிருந்து மறைந்துபோகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

11/108:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று . ஒருவன் செய்த உதவியை மறப்பது நல்லதில்லை செய்ததீமையை உடனே மறப்பது நலம்.மனிதர்களின் வாழ்வில் மனிதர்கள் மனமிரங்கி உதவிகளை புரிந்திருக்கக்கூடும் அந்த உதவிகளை மறப்பது செய்நன்றி மறப்பது என்பதாகும் அதேநேரம் அதே மனிதர்கள் தீமைகளையும் புரிந்திருக்கலாம் அத்தீமைகளை அன்றே மறந்து அவர்கள் செய்த நன்மைகளையும் உதவிகளையும் கருத்தில் கொள்வதே நன்மையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

11/107:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந்துடைத்தவர் நட்பு . நல்லவர்கள் தங்கள் துன்பத்தைத் துடைத்தவர் நட்பினை தான் எடுக்கும் எழுபிறவியிலும் நினைத்து வாழ்த்துவர்.சிறந்த மனிதர்கள் தங்களின் துன்ப துயரங்களை துடைத்தவர்களின் உறவினை தாங்கள் எடுக்கும் ஏழு ஏழு பிறவியிலும் நினைத்து வாழ்த்திக்கொண்டேயிருப்பார்கள் என எடுத்துரைக்கின்றது தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

11/106:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.தூயவர் நட்பினை மறவாதிருக்க வேண்டும் துன்பம் வரும் காலத்து தனக்கு உதவியாய் இருந்தவர்களின் நட்பைகைவிடாது இருக்கவேண்டும்.நல்லவர்களின் உறவை ஒருபோதும் மறக்க கூடாது என்று நினைவில் கொண்டிருக்கவேண்டும்  துன்பங்கள் வரும் நேரங்களில் தங்களுக்கு ஒருதுணையாக இருந்தவர்களின் உறவை என்றும் கைவிடக்கூடாது அவர்களின் உறவை வளர்த்து கொள்வதே மேன்மை தருமென எடுத்துரைக்கின்றது தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

11/105:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்வின் வரைத்து . ஒருவர் செய்யும் உதவி முன்பு தான் செய்த உதவியின் அளவாகக் கருதக்கூடாது செய்யப்பட்டவர்களின் பண்பினை அளவாக கருதவேண்டும்.மனிதவாழ்வில் உதவி தேவைப்பட்ட நேரத்தில் உதவி செய்தவர்களை அவர்கள் செய்த உதவின் அளவைகொண்டு மறுஉதவி செய்யக்கூடாது உங்களுக்கு உதவி செய்தவர்களின் வாழ்கை பண்பையும் நல்ல குணத்தையும் உங்கள் மீது கொண்ட அன்பையும் மனதில் கொண்டு  அதற்கு ஏற்றவாறு வாழ்வில் நடந்து கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

11/104:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக் கொள்வார் பயன் தெரிவார்.தனக்கு ஒருவன் தினையளவு நன்மை செய்தாலும் அதன் பயனறிந்தோர்  பெரிதாக கருதுவர்.மனிதர்களே நீங்கள் சிறிய உதவியை யாரிடமாவது பெற்றிருந்தாலும் அந்த உதவி உங்களுக்கு சரியான நேரத்தில் தக்க உதவியை பெற்றுத்தந்திருந்தால் அதன் பயனறிந்து அதை பெரிதாக கருதவேண்டும் என்றும் நன்றி மறவாது வாழ்ந்து காட்டவேண்டும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

11/103:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது . பயன் கருதாமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்ப்பின் அதற்கான நல்லியல்பு கடலினும் பெரியது.உதவிகள் செய்யும் போது பலன்களை எதிர்பார்க்காமல் உதவிகளை புரிந்திருந்தால் அந்த நல்ல செயல் இந்த வையகத்தை விட பெரியது என எடுத்துரைக்கின்றது திருகுறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும் .

11/102:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது ஒருவனுக்கு மிக அவசியமான காலத்தில் செய்த உதவி சிறிதாயினும் அதன் தன்மை இவ்வுலகத்தை விடப் பெரியதாகும்.மனிதவாழ்வின் மனிதர்களுக்கு மனிதர்கள் உதவி செய்வது வாழ்வில் வளமை மனிதர்கள் கஸ்டங்களில் வாழுகின்றன காலத்தில் யார் முன்வந்து தக்கதர்னத்தில் உதவி செய்கின்றார்களோ அந்த உதவி சிறிதாயினும் அதன் தன்மை மனிதர்கள் வாழ்கின்ற உலகில் மிகச்சிறந்தது என குறள் எடுத்துரைக்கின்றது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதாணி முனையில் பாலாஜீ  பாலசுப்ரமணியம் டென்மார்க்

11/101:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிது தான் உதவியாதும் செய்யாதிருக்க பிறர்,தனக்கு கைமாறு கருதாது செய்யும் உதவிக்கு விண்ணுலகும் மண்ணுலகும்  இணையாக ஈடாகாது மனிதர்களின் வாழ்வுதனில் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்வது வாழ்வின் இலக்கணம் அப்படி இருந்தும் சிலர் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில்லை செய்யாதபோதும் தங்களுக்கு மற்றவர்கள் கைமாறு கருதாது செய்யும் உதவிக்கு இந்த உலகில் ஈடு எதுவுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

10/100:திருக்குறள்-இனியவை கூறல்

Image
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. உலகில் இன்பந்தரும் இனிய சொல்லிருக்க வேதனை தரும் கடும் சொல் கூறுவது தன்னிடம் உள்ள கனியை உண்ணாது இனிமையற்ற காயை உண்பது போன்றதாகும்.உலகில் மக்கள் இனிய நல்ல சொற்களை வாய் திறந்த பேசுவதை விட்டு மக்களுக்கு மனதுக்கு வேதனை தரும் சொற்களை பாவித்து மற்றவர்களின் மனங்களை புண்படுத்துவது மக்கள் தங்களிடம் இருக்கும் கனிந்த பழத்தை உண்ணாது கனியாத காயை உண்பது போல் ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.டென்மார்க் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

10/99:திருக்குறள்-இனியவை கூறல்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது பிறர்கூறும் இனிய சொல்கேட்டு அதன் இன்பத்தை உணர்பவன் பிறரிடம் வன்மையான கடுஞ்சொல்லை கூறுவதேன் ? மனிதர்களின் வாழ்வில் மற்றவர்களுடன் உரையாடும்போது இனிய சொற்களை தங்களின் காதுகளில் கேட்டு மகிழும் மனிதர்கள் ஏனைய மனிதர்களுடன் ஏன் தீய வார்த்தைகளை உபயோகிக்கின்றார்கள் ?என திருக்குறள் அதிகாரம் கேள்வியாக இந்த குறள் அமைந்துள்ளது என எடுத்துரைக்கின்றது திருக்குறள். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

10/98:திருக்குறள்-இனியவை கூறல்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந்தரும் . பிறருக்கு வேதனைக்கொடுக்காத இனிய சொல் கூறியவருக்கு இப்பிறவியிலும் இனிவரும் பிறவியிலும் இன்பம் தரும்.மானிடருக்கு மானிடர் மனவேதனையை கொடுக்காத இனிய சிறந்த சொற்களால் உரையாடிக்கொண்டால் இந்த பிறவியிலும் இனி வரும் பிறவியிலும் இனிய இன்பமான வாழ்க்கை அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

10/97:திருக்குறள்-இனியவை கூறல்

நயன் ஈன்று பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.பிறருக்கு நன்மையைக் கொடுக்கும் இனிய சொல் நேர்மையான வாழ்க்கையையும் நல்வழிப்பயனையும் உண்டாக்கும் . பிறமனிதர்களுக்கு நல்லதையே செய்யும் சிறந்த இனிய வாய் மொழிகள் என்றும் வாழ்வில் நேர்மையான வாழ்வையும் நல்ல ஒழுங்கங்களையும் வாழ்வில் நடைமுறைப்படுதும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

10/96:திருக்குறள்-இனியவை கூறல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.அறமும் நன்மையும் தரும் இனிய சொற்களை ஆராய்ந்து ஒருவன் சொல்வானால் தீமைகள் ஒழிந்து அறம் பெருகும்.இந்த உலகில் மக்களால் அறமும் நீதியும் நேர்மையும் நன்மையும் என அறநெறிப்பட வாழ்ந்து இனிய சொற்களாக தேர்ந்தெடுத்து உரைப்பார்களானால் தீமைகள் அனைத்தும் ஒழிந்து நன்னெறிப்பட்ட சமுதாயம் உருவகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

10/95:திருக்குறள்-இனியவை கூறல்

பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப்பிற.பெரியார்களிடத்து பணிவும் அனைவரிடத்தும் இனிய சொற்கள் பேசுதலே ஒருவனுக்கு அணியாகும் இவையன்றி உடம்பில் அணியும் அணிகலன்கள் அணியாகாது.மனிதர்களிடத்தில் பண்பும் பணிவும் அன்பும் இரக்கமான தாழ்மையான இனிய வார்த்தைகளை பேசுதலே மனிதர்களுக்கு நல்ல சிறப்பைதரும் இவற்றையெல்லாம் விட மனிதர்கள் உடம்பில் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களால் என்றுமே சிறப்பிருக்காது என எடுத்துரைக்கின்றது திருக்குறள். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

10/94:திருக்குறள்-இனியவை கூறல்

துன்புறூந்உந் துவ்வாம் இல்லாகும் யார்மாட்டும் இன்சொலினதே அறம்.இன்பந்தரும் இனிய சொற்களையே எவரிடத்தும்பேசுகின்றவர்களுக்குத் துன்பம் தரும் வறுமை வந்து சேராது. நல்லவார்த்தைகளை  சந்தோஷமான பேச்சுக்களையும் எல்லோரிடம்திலும் பேசுகின்ற மனிதர்களுக்கு சோதனையும் வறுமையும் தரும் பஞ்சம் என்றும் வந்து சேராது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

10/93:திருக்குறள்-இனியவை கூறல்

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இனசொலினதே அறம் . அறம் என்பது முகமலர்ச்சியுடன் ஒருவரை பார்த்து உள்ளத்தில் எழும் அன்பு உணர்ச்சியினால் கூறும் இனிய சொல்லே ஆகும் . மனிதர்களை மனிதர்கள் சந்தித்து பேசும் வேளையில் உள்ளத்தால் முகம்மலர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் இனிய சொற்களே வாழ்வில் சிறந்த சொற்களாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

10/92:திருக்குறள்-இனியவை கூறல்

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல்னாகப் பெறின் . மனமுவந்து ஒருவருக்கு ஒரு பொருளை கொடுபதை விட முகம் மலர்ந்து கூறும் இனிய சொற்கள் சிறந்ததாகும்.இந்த உலகில் மனிதர்களே நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும் எதையாவது யாருக்கும் கொடுக்கு விருப்பினால் அதை மனம் மகிழ்ந்து கொடுங்கள் அந்த பொருட்களை கொடுக்கவிருப்பமில்லாவிட்டால் உங்கள் முகம் மலர்ந்து இனிய வார்த்தைகளை கூறி அவர்களின் மனதை மகிழச்செய்யுங்கள் அதுவே உங்கள் வாழ்கைக்கு சிறப்பாக இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீபாலசுப்பிரமணியம்.

10/91:திருக்குறள் -இனியவை கூறல்

இன்சொல் ஈரம் அளை இப் படிறு இலவாஞ் செம் பொருள் கண்டார் வாய்ச் சொல்.இன்சொற்கள் என்பது மாசில்லாத அன்போடு கலந்த மெய்ப்பொருள் கண்டாரின் வாய்ச்சொற்களே ஆகும்.பொய்யில்லாத நற்சொற்கள் கொண்டு அன்பு கலந்து உண்மையானபொருள் கண்டவர்களின் வாய்மொழியே சிறப்பாகும்.எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் 

9/90:திருக்குறள் - விருந்தோம்பல்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திந்து நோகக் குழையும் விருந்து . அனிச்சம்மலர் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் அதுபோல விருந்தாளிப்பவர் இன்முகமற்று இருந்தால் விருந்தினர் விடுவர்.அனிச்சம் பூவை மணந்துபார்த்தால் பார்த்தால் அது வாடிவிடும் அதுபோல விருந்து உபச்சாரம் செய்பவர்கள் நல்ல மனத்தோடும் சிரித்த முகத்தோடும் விருந்தளித்து உபசரிக்கவிட்டால் விருந்தாளிகளின் மனம் வாடும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

9/89:திருக்குறள்-விருந்தோம்பல்

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.பெருஞ்செல்வந்தாக வாழுங்காலத்தில். விருந்தினரை உபசரிக்காகதவிரின் நிலை வறுமையே ஆகும் இது அறிவற்றவர்களிடத்தில் காணப்படும்.மனிதர்களின் வாழ்வில் செல்வமும் செழிப்புமாக வாழும் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினரை முழுமனதாக விருந்து உபச்சாரம் அளித்து வாரவேற்றால் உங்கள் வாழ்வில் வறுமை என்றும் நேராது.அப்படி உபசரிக்கவிடின் உங்கள் செல்வங்கள் எல்லாம் அழிந்து வறுமை வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவீர்கள் இச்செயல் அறிவற்ற செயல் ஆக கருதப்படுகிறது என எடுத்துரைக்கின்றது  திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.

9/88:திருக்குறள் -விருந்தோம்பல்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தரைப்படாதார் விருந்து உபசரித்தலாகிய அறத்தின் பயனை ௮டையாதவர் பொருள் வருந்தி சேர்த்து அதன் பயனையடையாமற் போய்விட்டோமே என்று வருந்தும் நிலயடைவர்.விருந்தாளிகளுங்கு விருந்துபச்சாரம் செய்யாது கஸ்டப்பட்ட சேர்ந்த செல்வங்களின் பயனை அனுபவிக்காமல் போய்விட்டோமே என்ற வருத்தும் நிலையடைவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.