Posts

Showing posts from September 26, 2018

25/250:அருளுடைமை திருக்குறள்

Image
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு இடத்து .தன்னைவிட எளியவனை தான் வருத்த முற்படும்பொழுது தன்னைவிட வலியவர் முன்தான் அஞ்சும் நிலையை எண்ணிக் கொள்ள வேண்டும்.மனிதர்களே உங்களை விட பலமில்லாத ஒரு மனிதனை  நீங்கள் அடித்து உதைத்து துன்புறுத்தும் போது நீங்கள் நினைக்க வேண்டும் என்னை விட பலம் பொருந்தியவர்கள் இந்த பூவியியல் மீது வாழ்ந்துகொண்டிருபார்கள் என்று அவர்களை நான் எதிர்கொள்ளும்போது எனது நிலமை என்னாகும் என்று சிந்தியுங்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

25/249:திருக்குறள்-அருளுடைமை

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.அருளற்றவன் செய்யும் அறம் என்பது அறிவற்றவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டது போலாகும். இரக்கமில்லாத மனிதர்கள் செய்யும் அறநெறிகள் என்பது நூல்களை வாசித்து அதில் உள்ள சரியான அர்த்தங்களை புரிந்து கொள்ள தெரியாதவர்கள் நூல்களை வாசித்து அதன் உள்ளடக்கத்தை புரிந்து கொண்டது போன்றதாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

25/248:திருக்குறள்-அருளுடைமை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.பொருளில்லாதவர் ஒரு நாள் பொருடையவர் ஆவார் ஆனால் அருளில்லாதவர் ஒரு நாளும் சிறந்து விளக்கமாட்டார்.எழைகள் தங்களின் வாழ்வில் சிறந்தவர்களாக வாழ்ந்தால் அவர்கள் வாழும் காலத்தில் எப்பவோ ஒரு காலத்தில் செல்வத்தை அடைவார்கள்  ஆனால் இரக்கமில்லாமல் கொலை கொள்ளை என்று வாழும் மனிதர்களுக்கு என்றும் வாழ்வில் சிறந்த வாழ்க்கை அமையாது அத்துடன் ஆயுளும் குறைந்து நரகத்தையே அடைவார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

25/247:திருக்குறள்-அருளுடைமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.பொருளில்லாதவருக்கு இவ்வுலக வாழ்வில் இன்பம் இல்லாதது போல் உயிர்களிடத்தில் அன்பில்லாநவருக்கு வானுகமில்லை என்றதாகும்.செல்வம்  இல்லாத மனிதர்களுக்கு வாழும் பூமியில் இன்பம் இனிதாக இல்லாமல் இருப்பது போன்று உயிர்களிடத்தில் இரக்கமில்லாத மனிதர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

25/246:திருக்குறள்-அருளுடைமை

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.அருளற்றவராய் கொடுமைகளைச் செய்பவர் பொருளற்றவராய் வாழ்வும் இழந்தவராகக் காணப்படுவார்.மனித வாழ்வில் கருணை உள்ளம் படைத்தவர்களாக வாழவேண்டும் அப்படி இல்லாவிடின்.பொன் பொருளற்றவராகவும் சொந்த பந்தங்களையும் குடும்ப வாழ்வையும் இழந்தவராகவும் பூமியில் காணப்படுவாரேன எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

25/245:திருக்குறள்-அருளுடைமை

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.அருள் உடையவர்களுக்கு என்றும் துன்பம் இல்லை காற்றுடன் வளமுடைய இவ்வுலகில் வாழ்வாரே இதற்கு சான்று.இரக்கமுள்ள மனிதர்களுக்கு எங்கேயும் எப்பவும்  துன்ப துயரங்களில்லை காற்றை இயற்கை வளமாக கொண்ட பூவியியல் மீது வாழ்ந்து வருகின் மனிதர்களே அதற்கு சாட்சியாவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

25/244:திருக்குறள்-அருளுடைமை

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.உயிர்களிடம் கருணைகொண்டு அன்பு செலுத்துபவர் தன் உயிர் அச்சுமளவிற்கு என்றும் பாவச் செயல்களைச் செய்யமாட்டார்.இந்த பூமியில் வாழுகின்ற உயிரினங்களையெல்லாம் அன்பாகவும் கருணையாகவும் சிறந்த பண்புடனும் தங்களின் உயிரை போல் காத்து நல்லொழுக்கத்துடன் வாழுகின்ற மனிதர்களுக்கு  தங்களின் உயிருக்கு மற்றைய உயிரினங்களால் தீங்கு வந்து தாங்கள் இறந்துபோகக் கூடும் என்ற அச்சம் வாழ்வினில் என்றுமே இருக்காது அதனால் நல்லவர்கள் பிற உயிர்களுக்கு துன்பம் தந்து வாழமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

25/243:திருக்குறள்-அருளுடைமை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.உயிர்களிடம் கருணை கொண்டு அருள் செய்பவர் இருள் சேர்ந்த நரகரத்திற்கு செல்லமாட்டார்.இந்த உலகில் வாழுகின்ற உயிர்களுகெல்லாம் இரக்க மனத்துடன் உதவி செய்து வாழும் மனிதர்களுக்கு ஒளியில்லாத இருள் சூழ்ந்த நரகத்திற்கு இறப்பின் பின் செல்லவேண்டியிருக்கதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

25/242:திருக்குறள்-அருளுடைமை

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்  தேரினும் அஃதே துணை.நல்வழியை ஆராய்ந்து அருள் செய்ய வேண்டும் ஏனெனில் பலவழிகளில் அருளே சிறந்ததாகக் கருதப்படுகிறது.மனிதர்களின் வாழ்வினில் சிறந்த அருள் அறத்தையே தெரிவு செய்து  அதையே சிறப்பாக கருத்தில் கொள்ளவேண்டும் ஏனெனில் அருள்ச்செல்வமே இந்த உலகில் தலை சிறந்த செல்வமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

25/241:திருக்குறள்-அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.உயிர்களிடம் அருள் கொண்டு வாழ்வதே சிறந்த செல்வமாகும் பொருளால் வரும் செல்வம் அருளில்லா விடில் இழிவாகக் கருதப்படும்.மனிதர்களின் வாழ்வில் உயிர்கள் மீது அன்பும் ஆதரவும் பண்பும் பாசமும் ஆசையும் கொண்டு வாழ்வதே மனித வாழ்வுக்கு சிறப்பு உயிர்கள் மீது அருள்கொண்டு வாழ்வதே அருள் செல்வம் ஆகிறது பொருட்செல்வத்தால் வரும் செல்வத்தில் அருளில்லாமல் இருந்து விட்டால் மனிதர்களிடத்தில் மரியாதையற்றுப்போய்விடும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.