63/624:திருக்குறள்-இடுக்கண் அழியாமை
திருக்குறள்: மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னாான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ( குறள் 624 - அதிகாரம் : இடுக்கண் அழியாமை ) பொருள்: சேற்றில் மாட்டிய வண்டியை எருது எவ்வாறு பலம் கொண்டு இழுத்துச் செல்கிறதோ, அவ்வாறு எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்துத் தாங்கிச் செல்லும் எருது போன்ற வலிமையான மனிதனுக்கு வந்த துன்பமே, அவனைக் கண்டு (எவ்வாறு நம்மை வெல்லவில்லை என்று) துன்பப்படும். விரிவாக்கம்: வாழ்வில் வண்டியில் பூட்டப்பட்ட காளை மாடுகள், செங்குத்தான பாதையிலோ அல்லது சேறும் சகதியுமான மேடு பள்ளங்களிலோ வண்டி மாட்டிக்கொண்டாலும் சோர்வடையாமல் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி எப்படி வண்டியை இழுத்துச் செல்கின்றனவோ, அதேபோலத் தளராத மனவலிமை கொண்ட மனிதனும் வாழ்க்கையின் சோதனைகளை எதிர்த்துப் போராட வேண்டும். எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் தன்னைச் சூழ்ந்தாலும், காளையைப் போலப் பின்வாங்காமல் அவற்றை முறியடித்து முன்னேறும் உறுதி படைத்த ஒருவனைத் தாக்க வந்த துன்பமே, அவனை வீழ்த்த முடியாமல் திகைத்துத் தானும் வருந்தும் நிலை ஏற்படும் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார். English Translation...