Posts

Showing posts from February 25, 2020

101/1010:-நன்றியில் செல்வம்

சீருடையச் செல்வர் சிறுதுளி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து.கொடையாளர்கள் சிலகாலம் வறுமையுறுதல் மேகம் வறுமையுற்றது போலாகும்.தான தர்மங்கள் செய்பவர்கள் சிறிதுகாலம் வறுமையால் வாடினாலும் மேகங்கள் வறுமையுற்றால் மழைபொழியாது அதனால் பூமியும் செழிக்காது உலகே வறுமையுற்றதுபோலகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1009: நன்றியில் செல்வம் திருக்குறள்

அன் பொரீஇத் தற்சென்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக்கொள்வார் யாரோ? மனிதர்கள் மீது அன்பும் கொள்ளாமல் அறத்தின் நீதி வழி நின்று அறமும் செய்யாது தன்னையும் தன் உடலையும் வருத்தி சேர்த்த செல்வத்தை பிறர்தான் அனுபவிப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1008:திருக்குறள்-நன்றியில் செல்வம்

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. ஏவராலும் விரும்பபடாதவன் செல்வம் ஊர் நடுவில் விழமரம் பழுத்தது போல.சமுதாயத்தில் வெறுக்கப் படுகின்றவர்களிடம் குவித்து கிடக்கின்ற செல்வங்கள் அதே ஊர் நடுவில் ஒரு நஞ்சு மரம் காய்த்து அது பழமாகினாலும் அதனால் சமுதாயத்துக்கு எந்த பயனுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1007:திருக்குறள்-நன்றியில் செல்வம்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றான் தமியள்மூத் தற்று.ஏழைக்கு கொடுத்துதவாதவன் செல்வம் அழகுள்ள குமரி மணமாகாது கிழவியானது போலும்.ஏழைகளுக்கு மனம் வந்து உதவி செய்யாதவர்களின் செல்வம் அழகுள்ள ஒரு இளம் குமரி திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வாழ்வினில் முதுமையடைந்தது போலகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1006:திருக்குறள்-நன்றியில் செல்வம்

ஏதம் பெருங்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்.தானும் அனுபவியாமல் ஏழைக்கும் ஈயதான் பெருஞ் செல்வத்திற்கு ஒரு கேடு.மிக செல்வமுடைய மனிதர்கள் தாங்களும் அனுபவிக்காது ஏழைகளுக்கும் கொடுத்து உதவாது வாழுகின்ற வாழ்வுதனில் அவர்களால் சேமித்து வைத்திருக்கின்ற செல்வத்திற்கே மரியாதை கேடு அதன் மதிப்பை அதுவே இழக்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1005:திருக்குறள்-நன்றியில் செல்வம்

கொடுப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிய உண்டாயினும் இல்.பிறருக்கு கொடுக்காதவன் தானும் உண்ணாதான் இவனுக்கு பலகோடி இருந்தென்ன பயன்? செல்வங்கள் பல கோடியிருந்தாலும் தானும் அதை அனுபவிக்காது மற்றவர்களுக்கும் கொஞ்சமாவது கொடுக்காமலும் வாழுகின்ற வாழ்வினில் பயன்தான் என்ன ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1004:திருக்குறள்-நன்றியில் செல்வம்

எச்சமென்று என்கண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப்படாஅ தவன்.எராலும் விரும்பப் படாத கருமி தனக்கு பிறகு என்று எதை கருதுகிறான்? இந்த உலகில் மனித இனத்தால் விருப்ப படாத மனிதர்கள் மரணத்தின் பின் எது மிஞ்சி இருக்கபோகின்றது என நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள் ? யாருக்கும் எதுவும் சொந்தமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1003:திருக்குறள்-நன்றியில் செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. சேர்த்த பொருளை இறுக்கி வைத்து கொண்டு ஈகை புகழில்லாத ஆடவர் பூமிக்கு பாரமாவர்.செல்வத்தையே சேர்த்துக்கொண்டு புகழை தேடாத மனிதர்கள் இந்த உலகில் பிறந்ததும் வாழ்ந்ததும் பூமிக்கு பாரமேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1002:திருக்குறள்-நன்றியில் செல்வம்

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு.அனைத்தும் பொருளால் ஆகும் என்று பிறர்க்கு கொடுக்காத கருமிக்கி மறுமையிலும் இழி பிறப்பு உண்டாகும்.அனைத்துமே பணத்தாலும் பொருட்களாலும் ஆகி விடுமென நினைத்து மற்ற மனிதர்களுக்கு தங்களின் பொருட்களை கொடுத்து உதவாமல் கறுமம் செய்கின்ற மனிதர்களுக்கு அடுத்த ஏழுபிறவியிலும் இழிவான பிறப்பே பிறப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

101/1001:திருக்குறள்-நன்றியில் செல்வம்

Image
வைத்தான்வாய் சான்ற பொரும் பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்.பெரும் பொருளை சேர்த்து வைத்து உண்ணாது இறந்தவனுக்கு அப்பொருளால் உரிமை எதுவுமில்லை.ஆசைகள் அதிகமாகி அளவுக்கு மிகுதியா சொத்துகளை சேர்த்து உண்ணாமல் உறங்காமல் நோய் வாய்ப்பட்டு இறந்து போகும் மனிதர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் உழைத்தும் சேர்த்த உடமைகளால் என்ன பயன் கிடைக்கப்போகின்றன எதுவுமில்லை ஆனால் உலகில் வாழும் மற்றவர்களுக்கே அது பயன் படுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.