Posts

Showing posts from September 10, 2018

7/61:திருக்குறள்-மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறவறிந்த மக்கட்பேறு அல்ல பிற ஒருவன் பெற வேண்டியவற்றுள் அறிய வேண்டியவற்றை அறிய தகுந்த மக்களை பெறுவதன்றி சிறந்தது தொன்றுமில்லை.இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியதில் பெற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளவும் கெட்டித்தனமான மிகவும் அறிவுடைய பிள்ளைகளை பெறுவதை விட சிறந்தது இந்த உலகில் எதுவுமில்லையேன எடுத்துரைக்கின்றது திருக்குறள்.குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.

6:60திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு . மனைவியின் அறநெறி செயலே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பார்,நல்ல மக்களைப் பெறுதலே அம்மாங்கலத்திற்கு அழகு என்பார்.மனையாளின் சிறந்த அறநெறியே மனைக்கு சிறப்பு நல்ல வாழ்வே குடும்பத்துக்கு அழகு நல்ல பிள்ளைகளை பெற்றெடுப்பதே மங்கலமாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

6/59:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை . கற்பிற்ச் சிறந்த புகழையுடைய மனைவியைப் பெறாதவர் தம்மை இகழ்ந்து பேசுபவர் முன் பெருமிதமாக நடக்கவில்லலாது.நல்ல நடத்தையால் புகழையீட்டமுடியாத மாதர்தம்மை மனைவியாய் பெற்றவர்கள் தம்மை சமுதாயத்தில் இகழ்ந்து செப்பித்திரிபவர்கள் முன் கெளரவமான நற்பெயரை பெறமுடியாமல் அவமரியாதையுடன் வாழநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

6/58:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

பெற்றாற் பெறின்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.மனைவி, கனவணை தொழுது அவர் அன்பினைப்பெறுபவள் வானுலகில் பெரும் சிறப்பைப் பெறுவாள்.மனையாள் கணவனை வணங்கி கணவனின் அன்பை பெறுவாளானால் வானுலகம் சென்றாலும் அங்கே அவள் தனிப்பெரும் சிறப்பைப்பெறுவாள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

6/57:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை மகளிரை சிறை வைத்து காத்தலால் பயன் எதுமில்லை அவர்கள் ஒழுக்கத்தால் தம் கற்ப்பைக் காத்துக் கொள்ளும் காவலே சிறந்தது.இந்த உலகில் மனிதர்களே பெண்களை அடிமைப்படுத்தி சிறைப்படுத்தி வாழவைப்பதால் பெண்ணின் பெண்மையை காத்துவிடமுடியாது பெண்கள் தங்கள் மானத்தை தாங்களே தங்கள் வாழ்வின் ஒழுக்கத்தால் காத்துக்கொள்வதே பெண்களின் வாழ்விற்க்கு சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

6/56:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்வலாள் பெண்.தன் கற்பையும்,தன்னையும்,கணவனையும் காத்து இருவரின் புகழ் நீங்காமல்,தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே மனைவி.இல்லத்தரசி என்பவள் கற்புநெறிதவறாது தன் கணவனோடு தானும் வாழ்க்கையில் வாழ்ந்து தன் குடும்பக்கடமைகளையும் புகழ்பட செய்து இருவரும் இந்த உலகில் சிறந்த குடும்பமாக வாழ்ந்தால் அவளே சிறந்த இல்லத்தரசியாவாள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

6/55:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

தெய்வந் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை. கடவுளை வணக்காமல்,கணவனை வணங்கியெழுபவள் பெய்யென சொல்ல பெய்யும் மழை.தெய்வங்களை வணங்காது கணவனையே கண் கண்ட தெய்வமாக வணங்கி துயில் எழும் பெண்கள் வான் மழையை பெய்யென சொல்லி அழைத்தால் பொழியும் வான் மழை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

6/54:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

பெண்ணிற் பெருந்ததக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் மனைவியிடத்தில் கற்பு என்னும் மாண்பு மன உறுதி இருக்கப் பெற்றால் கணவன் அடையக்கூடியவற்றுள் அம்மனைவியைவிட மேலான பொருள் வேறில்லை.திருமணவாழ்வில் மனைவியிடத்திலும் கணவனிடத்திலும் கற்பு எனும் மாண்பும் மன நம்பிக்கையும் இருக்குமாயின் அடையக்கூடியவற்றில் கணவனுக்கு அம்மனைவியைவிட மேலான செல்வம் வேறில்லை மனைவிக்கும் அடையக்கூடியவற்றுள் சிறந்த கணவன் அமைந்தால் அதைவிட சிறந்தது வாழ்வில் எதுவுமில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

6/53:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடைமனைவியிடம் நற்குண பண்புகள் இருக்குமாயின் கணவனிடத்தில் இல்லாதது இல்லை அவ்வாறு இல்லையானால் வாழ்க்கையே இல்லையென்றாகும்.மனிதர்களின் திருமண வாழ்வில் மனைவியிடம் நற்குணப்பண்புகள் இருக்கவேண்டும் என இந்த சமுதாயம் எதிர்பார்க்கின்றது அப்படியான நற்குணமுள்ள மனைவி கணவனுக்கும் சமுதாயத்தாயத்தில் கிடைக்குமாயின் கணவனிடத்திலும் அந்தகைய நற்குணபண்புகள் இல்லாதது இருக்கமுடியாது அவ்வாறு இல்லையானால் திருமணவாழ்வில் வாழ்க்கையே இல்லையென்றாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

6/52:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.இல்லறத்திற்கேற்ற நற்குணங்கள் மனைவியிடம் இல்லாதிருக்குமாயின்  அவ்வாழ்க்கை எவ்வளவு சிறப்பினும் பயனில்லை.மனிதர்களின் வாழ்வில் திருமணம் ஒரு பாகமாகும் வாழ்க்கைக்கு ஏற்ற மனைவி அமையவேண்டும் என்பது தமிழ் சபையோரின் நெறி.நற்குணங்கள், நற்சிந்தனையும் அறிந்த மனைவி வாழ்வில் கிடைத்தால் வாழ்வு நெறிப்படும்.அப்படி நெறிப்படவாழ்தாலும்,மேல் குறிப்பிட்ட குணங்கள் அமையாவிடின் இல்லறவாழ்வு சிறப்படையாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

6/51:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைக் துணை.இல்வாழ்க்கைக்கேற்ற நற்குண நற்செய்கைகளைக் கொண்டவளும்.கணவனின் வரவிற்குள் செலவு செய்பவளும் நல்ல மனைவி குடும்பத்தோடு வாழ்வில் ஒத்துவாழகூடிய பெண்ணும் இந்த உலகத்தையே புரிந்துகொண்டு வாழக்கூடிய மனையாளும் குடும்ப வரவு சிலவுகளுக்குள் தங்கள் வாழ்வை வாழ்கையாக்கும் மனையாளே சிறந்தவளாக இருக்கமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் திருக்குறள்.புலமை  பாலாஜி பாலசுப்பிரமணியம் .

5/50:திருக்குறள்-இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் இவ்வுலகில் வாழவேண்டிய நெறியுடன் வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு ஒப்பாவான்.இந்தப் பூவுலகில் மனிதர்கள் ஆகிய மானிடப்பிறவிகள் வாழும் நெறிகள் தவறாது வாழ்ந்து வந்தால் வின்னுலகில் வாழும் தேவர்களுக்கு ஈடாவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

5/49:திருக்குறள்-இல்வாழ்க்கை

அறனெனப் படடதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று அறம் எனச் சொல்லபடுவதே இல்வாழ்க்கை அஃதும் பிறர்பழிப்பது இல்லாயாயின் சிறந்ததாகும்.மனிதர்கள் வாழ்கின்ற இல்லற வாழ்க்கைதனில் பிறர் பழிப்பதுபோல் வாழ்க்கையை நடத்தாது வாழ்வதே வாழ்வுக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை. பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

5/48:திருக்குறள்-இல்வாழ்க்கை

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.பிறரை நெறி வழிப்படுத்தித் தானும் அறநெறியில் தவறாது வாழ்பவன் இல்வாழ்க்கை தவத்தினும் வலிமையானது.மனிதர்களே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களை நெறிப்படவாழவையுங்கள் அத்தோடு நீங்களும் அறநெறி தவறாது வாழுங்கள் அப்படி வாழ்ந்தால் உங்கள் இல்லறவாழ்க்கை நீங்கள் செய்யவேண்டிய தவத்தினும் வலிமையானது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

5/47:திருக்குறள்-இல்வாழ்க்கை

இயலபினான் இல்வாழ்க்கை வாழ்பவன்  என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.இல்வாழக்கையை அறவழியில் நடத்துபவன் மறுமை இன்பத்தை நாடி முயல்பவரை விட சிறந்தவன்.இல்வாழ்வில் தெய்வீக சிந்தனைகள் கொண்டு மறுமை சிந்தனையை நாடி முயற்சி செய்து வாழுகின்ற மக்களுக்குள் அதி முயற்சி செய்து வையகத்தில் வாழ்ந்து காட்டுபவனே சிறந்தவன்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். திருக்குறள் புலமை.வீழ்வது நாம் ஆயினும் உயர்வது தமிழாகட்டும்.

5/46:திருக்குறள்-இல்வாழ்க்கை

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன்.ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்துவானாயின் அதைவிட அவன் வேறுவழியில் சென்றுபெறும் மேலான பயன் வேறில்லை. இல்லத்தரசன் இல்லறத்தில் அறவழியை நோக்கி நடத்துவனானல் அதுவே அவன் பெறும் சிறந்த பயன் அதைவிட சிறந்தபயன் இந்த உலகில் எதுவுமில்லையென எடுத்துரைக்கின்றது தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

5/45:திருக்குறள்- இல்வாழ்க்கை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ஒருவனது இல்வாழ்வில் மனைவி மக்களிடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருந்தால் அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் நலனும் ஆகும் மனிதர்களின் குடுப்ப வாழ்க்கையில் அன்பும் பண்பும் பொறுமையான வாழ்வியல் சிந்தனைகளும் அறம் வழங்கும் இருக்குமாயின் அதுவே இல்வாழ்வில் நல்நடத்தை நலனுமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

5/44:திருக்குறள்-இல்வாழ்க்கை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.பழிக்கு அஞ்சுதல் நல்லவழியில் பெற்ற பொருளை பகிர்ந்துண்ணுதல் இவை இரண்டும் ஒருவன் வாழ்வில் இருந்ததால் அவன் வாழ்வும் சந்ததியும் குறையாது.மனிதர்களின் வாழ்வில் பாவம் பழிகளுக்கு எவர் அஞ்சுகிறார்களோ அவர்கள் நல்வழியில் பெற்ற பொருளை பகிர்ந்துண்ணுதல் அவர்களின் வாழ்வில் அவர்களின் பரம்பரைக்கே எப்பவும் குறையிருக்காது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் திருகுறள் புலமை பாலாஜீ பாலசுப்ரமணியம்

5/43:திருக்குறள்-இல்வாழ்க்கை

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கும் ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.தென்புலத்தார் .கடவுள் விருந்தினர்,சுற்றத்தார்.,தான் எனும் இவர்களிடத்து செய்ய வேண்டிய அறச்செயல்களை தவறாமல் செய்தல் கடமையாகும்.மனிதர்களின் வாழ்வில் பிறந்து இறந்து போன உயிர்களுக்கு செய்ய வேண்டிய பூசைகளை செய்யவேண்டும் சமுதாயத்துக்கும் செய்யவேண்டிய அறச்செயல்களை தவறாது செய்வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

5/42:திருக்குறள்-இல்வாழ்க்கை

 துறந்தார்க்கும் துவ்வா தவிர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான்  தூணை.துறவியர் ஏழை ஆதரவற்றிருப்பவர்களுக்கு இல்லற வாழ்வில் இருப்பவனே தக்க துணையாவான்.மனிதர்கள் வாழுகின்ற வாழ்வினில் இல்லாதவர்களுக்கும் ஏழைப்பட்டோருக்கும் வறுமையினால் வாடுகின்ற மக்களுக்கும் அடிப்படையில் வாழ்வாதாரம் அழிப்பதே மனிதர்கள் வாழ்கின்ற மானிடவாழ்கைக்கு சிறந்த ஆர்தமாகும்.வசதி  உள்ளவர்கள் பகிர்ந்து உண்பதே உலகில் சிறந்த செயலாகும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்

5/41:திருக்குறள்-இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கு நல்லாற்றின் நின்ற தூணை இல்லற வாழ்வில் சிறப்புடையவன் மற்ற கல்வி.துறவி.மனத்துறவு போன்ற அறநிலைகளிலுள்ள மூவர்க்கும் நெறியில் உறுதுணையாவான்.மனிதர்கள் வாழ்கின்ற இல்லற வாழ்வில் சிறப்புடையவர்களாகவும் கல்வியில் சிறப்புடைவர்களாகவும்  துறவி வாழ்விலும் இன்பங்களை தேடிச்செல்லாமலும் மனத்துறவு என்றால் ஆசைகள் அடக்கி வாழ்ந்தால் அவர்கள் மேன்மை தகுதிக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்பதே உலகின் மனிதகுலத்தின் நெறியாகும் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்

சிறார்களின் சிந்தனையில்

சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படகூடாது என்று இந்த உலகம் எமக்கு பணிந்துரை செய்கிறது ! உண்மையாக இருக்கலாம் சிறார்கள் சொன்னதை செய்யும் தகமையுடையவர்கள் ஆனால் சிந்திக்கும் தகமையில்லாதவர்கள் சிறார்களை சட்டத்தால் தண்டிக்கமுடியாது ! சிறார்கள் தாங்கள் மற்றவர்களை ஏன் சுடுகின்றோம் என்றே தெரியாமலே சுடக்கூடும்  பதின்எட்டுவயதுக்கு முன் சுதந்திரத்தையோ சுதந்திர அடிப்படையிலான எண்ணங்களையோ சிறார்கள் அறிந்திருக்கவாய்ப்பில்லை என்பதே உண்மை ! சிறார்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் போது அதே சிறார்கள் முன்கூட்டியே யாராலும் தண்டிக்கப்பட்டிருத்தால் கோபத்தை நினைவில் வைத்திருக்கும் சிறார்கள் துப்பாக்கிபிரயோகம் செய்யக்கூடும் ! சிறார்களுக்கு சீர் திருத்திப்பார்க்கும்  தன்மை இல்லாதவர்கள் இதனால்தான் பதின் எட்டு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பெற்றோர் பாதுகாப்பில் வாழ்கின்றார்கள் பதின் எட்டுவயதுக்கு மேலே அவர்களுக்கு சிந்திக்கும் தகமையுடையவர்களாக தகமையை பெறுவாதாகவும் உலக ஆராச்சியாளர்கள் கூறுகின்றார்கள் ! சிறார்கள் படிக்கவேண்டும் என்றே பெற்றோர்கள் விரும்புவார்கள் ஆயுதம் ஏந்தவேண்டும் என்று எந்த பெற்றோர்களு...