Posts

Showing posts from June 20, 2020

111/1110:புணர்ச்சி மகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.புன்சிரிப்பு உ அறிய அறிய அறியாமையை அறிவது போலாகும்.அழகிய பெண்ணின் அழகான அந்தரங்கங்களை  ஆடையை விலக்கி  பார்த்து ரசித்து அணைத்து அனுபவித்து மகிழும்போது அதில் கிடைக்கும் இன்பமே இதுவரை உடல் காணாத புதுவிதமான  இன்பமான அனுபவமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் .பாலாஜி பாலசுப்பிரமணியம். 

111/1109:புணர்ச்சி மகிழ்தல்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.ஊடல் தெளிதல் கூடல் இவை இன்பம் காணுபவர் பெற்ற பயன்கள்.ஊடல் செய்வதும் அதனால் காதல் இன்பம் பெறுவதும் அதை விட மேலான உடல் இன்பம்  பெற உடலுறவில் ஈடுபட்டு அனுபவித்து ஆசைகளை தீர்த்துக்கொள்வதும் ஆசைப்பட்டவர்கள் அனுபவிக்கும் உடலின் சுகங்களாகுமென  எடுத்துரைக்கின்றது திருக்குறள் . 

111/1108:புணர்ச்சி மகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.காதலர்களுக்கு காற்றும் நுளையாதபடி தழுவும் தழுவல் பேரின்பமாகும்.விரும்பிய இருவர் ஆணும் பெண்ணும் இறுக்கமாக கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டால் அது இன்பத்தின் பேரின்பமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

111/1107:புணர்ச்சி மகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.அழகிய மாநிலற் பெண்ணைத் தழுவுதல் தன் வீட்டில்லிருக்கும் தன் பங்கை உண்பது போன்றது.சொந்தமாக உழைத்து வாழ்வதும் தனது விருப்பப்படி விரும்பியவைகளை விரும்பியவர்களுக்கு  கொடுத்து மகிழ்ந்து வாழ்வதும் தன் மனைவியுடன் தாம்பத்திய வாழ்வில்  ஈடுப்பட்டு மகிழ்சியாக வாழ்வதும் தன் வாழ்வை தானே சிறப்பாக வாழ்வது போன்றதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

111/1106:புணர்ச்சி மகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்பபத் தீண்டலாம் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். அவள் உடலை அணைக்கும் தோறும் உயிர் தழைத்தலால் இவளுக்கு தோள்கள்அமிழ்தால் ஆனவை.பெண்ணின் மேனியை தழுவுவம் போது உயிரே இன்பத்தில் உயிர் பெறுகின்றது பெண்ணின் அழகிய அங்கங்கள் ஈரமான இதழ்களால் உருவாக்கப்பட்டவையென எடுத்துரைக்கின்றது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

111/1105:புணர்ச்சி மகிழ்தல்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்.இன்பம் விரும்பிய போது விரும்பியது தருபவை பூங்கொத்து நிறைந்த அவள் தோள்களே.இன்பத்தை விரும்பும்போது இன்பம் பெண்ணிடமிருந்து கிடைப்பது போல பூந்தோப்பில் பூத்திருக்கும் பெண் பூ பெண்தோள்களேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள். 

111/1104:புணர்ச்சி மகிழ்தல்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்.நீங்கினால் சுடும் நெருங்கினால் குளிருவதைப் போன்ற தியை இவள் எங்கிருந்து பெற்றாள்? அகற்றினாலும் சுடும்தன்மையையும் சேர்ந்தால் குளிரும்தன்மையையும் சேர்ந்த அதிசயமான உணர்வை கொடுக்ககூடிய தன்மையை இந்த பெண்கள் எங்கிருந்து பெற்றார்களென ? எடுத்துரைக்கின்றது திருக்குறள். 

111/1103:புணர்ச்சி மகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.தன் காதலியின் மென்தோளில் துயிலுதலை விட மேலுலகம் இனிதாகுமா? தனக்கென உருத்தான பள்ளியறையில் தனது பெண்ணின் தோளில் மேல் தலைவைத்து உறங்குவதை விட  மேலான இன்பம் மேலுலகம் சென்றாலும் இன்பமாக இருக்குமாயென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

111/1102:புணர்ச்சி மகிழ்தல்

பிணிக்கு மருந்தும் பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.நோயும் மருந்தும் வேறு வேறு இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.மனிதர்களின் வாழ்வில் நோய்கள் வருவதுண்டு அந்த நோய்களுக்கெல்லாம் ஒவ்வொரு மருந்துகள் உண்டு ஆனால் பெண் தரும் இன்ப நோய்க்கு மருந்து பெண்னேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

111/1101:புணர்ச்சி மகிழ்தல்

Image
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.கண்டு ,கேட்டு ,உண்டு , முகர்ந்து , தொடும் ஐம்புல இன்பமும் இவளிடமே உண்டு. பெண்ணிடம்தான் பார்த்து மகிழும் அழகும் கேட்டு மகிழும் இன்பமான பேச்சும் அனுபவித்து மகிழும் இன்பமும் மணந்துபார்க்கூடிய ஆசையும் தொட்டு தழுவி ஐம்புல இன்பங்களையும் அனுபவித்து நிறைவடையகூடிய இன்பங்கள் பெண்ணிடத்திலையே என எடுத்துரைக்கின்றது திருக்குறள். உடல் மண்ணுக்கு உயிர் தழிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.