Posts

Showing posts from November 2, 2018

39/387:திருக்குறள்-இறைமாட்சி

இன்சொலால் ஈத்தன்னிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ்வுலகு.இனிமையாகப்பேசி பொருள் வழங்கும் மன்னன் விரும்பிய அனைத்தும் இவ்வுலகில் கிடைக்கும். இந்த உலகில் மக்களின் விருப்பப்படி நல்லாட்சி நடாத்தும் அரசாங்கங்களுக்கு அவர்கள் விருப்பிய படி அரசாட்சி நடாத்த சிறந்த மக்கள் ஆணை கிடைக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.(பின் குறிப்பு- குறள் அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி உள்ளது ஆனால் அதை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி சிந்தித்துள்ளோம் அரசன் என்பது அரசாங்கமாக மாற்றம் பெறுகின்றது .

39/386:திருக்குறள்-இறைமாட்சி

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.மக்களுக்கு எளிமையாகவும் கடும் சொல் அற்றவனாகவும் இருப்பவன் அரசை உலகம் போற்றும்.பார்ப்பதற்கு பண்பாடன அரசு மக்களை வருத்தாது மக்களை கடும் கோல் ஆட்சிபுரியாது நல்லமுறையில் நடத்தினால் நல்ல அரசு என உலகம் போற்றும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

39/385:திருக்குறள்-இறைமாட்சி

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரது. பொருளைத்தேடி சேர்த்து பாதுகாத்து காத்த பொருளை உரிய வழியில் செலவிடுவது அரசு.உலகில் அரசாங்கம் என்பது மக்களால் உருவாக்கப்பட்டது அந்த அரசு மக்களிடம் வரிப்பணத்தை அறவிட்டு அந்த வரிப்பணத்தில் பொன் பொருள் தேடிச்சேர்த்து அவற்றை சிறந்த வழியில் விரிவாக்கப்படுத்தி பாதுகாத்து கவனமாக மக்களுக்கு பயன்படும் வகையில் மக்களின் வாழ்வியலுக்கு சிறந்த வகையில் வழங்குவதே சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/384:திருக்குறள் - இறைமாட்சி

39/384:அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.அறநெறி தவறாது தீமைகளகற்றி .வீரம் தவறாது ஆள்பவன் அரசன்.ஒரு நாட்டை ஆழுமை செய்கின்ற அரசாங்கம் அறநெறி தவறாமல் ஆட்சி நடத்தல் வேண்டும்.அந்த நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு தீமைகள் செய்யாது மக்களை நல்வழிப்படுத்தி அரசாங்கம் நடத்தவேண்டும்.வீரம் தவறாது ஆளுமை நாடத்துகின்ற அரசுகள் சிறந்தவை அன்னிய நாட்டு படைகளுடன் போர்முனையில் வெற்றி கொண்டு ஆளுமை நிலைநாட்டுகின்ற அரசு சிறந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/383:திருக்குறள்- இறையாட்சி

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு.விரைந்து செய்தல் , கல்வி ,வீரம் இம்மூன்றும் அரசால்பவர்க்கு நீங்காது வேண்டும். மக்களை ஆளுமை செய்கின்ற அரசாங்கங்களுக்கு விரைவாக செயல்படும் திறன், கல்வி ஞானம் ,மனதில் உறுதி செறிந்த வீரம் இவைகள் அனைத்தும் நிலையாக இருந்தல் வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/382:திருக்குறள்- இறைமாட்சி

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாம்மை வேந்தர்க் கியல்பு.மன உறுதி கொடை அறிவு ஊக்கம் இந்நான்கும் அரச இயல்பு. நிலையான மன உணர்வு ,கொடுக்கும் அறிவும், சிறந்த ஞானமும் ,நல்ல முயற்சிகளும் மக்களை சிறந்த முறையில் ஆட்சி செய்யும் திறனும் இவை அனைத்தும் மக்களை ஆட்சிப்படுத்தும் ஒரு அரசாங்கத்தின் சிறந்த இயல்பாக இருந்தல் வேண்டும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/381திருக்குறள்- இறைமாட்சி

39/381:படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.படை குடி பொருள் அமைச்சர்கள் நட்பு கோட்டை இவ்வாறும் உடையவன் அரசருள் சிங்கம் போன்றவன்.நல்லபடை ,நற்குடிமக்கள்,நற்செல்வம்,சிறந்தகல்வி அறிவு,அயல் நாடுகளுடனான நட்பு,சிறந்த அரண்,பணிவும் நற்பண்புகளுமுள்ள வீரமுடையவர்கள் இந்த உலகத்தை ஆளும் தகமையுடையவர்கள் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.