Posts

Showing posts from September 17, 2018

18/174:திருக்குறள்-வெஃகாமை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சியவர்.ஐம்புலன்களை அடக்கி குற்றமில்லா அறிவிடையோர்,தாம் ஏழ்மையில் இருப்பதால், அதைப்போக்க பிறர் பொருளை கவர எண்ணாதிருப்பர்.வாழ்வினில் நல் வாழ்க்கையை நடாத்தி வாழ்ந்து வரும் அறிவுள்ள மனிதர்கள் தாங்கள் ஏழைகளாக இருந்தாலும் அதை நீக்கிக்கொள்ள இன்ரொருவர் உடமைகளை தங்கள்வசமாக்க எண்ண மாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

18/173:திருக்குறள்-வெஃகாமை

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர். நிலையற்ற சிற்றின்பத்தை விரும்பி அறமில்லாத செயலை செய்யார் நிலையான பேரின்பத்தை விரும்புகின்றவர்கள் .நிதந்திரமில்லாத சிறிய இன்பத்தை விரும்பி ஒழுக்கநெறி அற்ற விடயங்கள் மனிதர்கள் செய்யமாட்டார்கள் நிதந்திரமான நிலை கொண்ட பேரானத்தத்தை விரும்புகின்றவர்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

18/172:திருக்குறள்-வெஃகாமை

படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.நடுநிலைமையல்லாத செயலுக்கு  அஞ்சுபவர்கள்  தமக்கு பயன் கிடைக்கும் என்பதாற்க்காக அறமற்ற செயலை செய்யாதிருப்பார் நடுநிலையோடு வாழ்வில் வாழும் மனிதர்கள் நடுநிலைமையில்லாத செயலுக்கு என்றும் பயப்பிடுவார்கள் ஆனால் அதில் தங்களுக்கு பயன்  ஏதேனும் கிடைக்கும் என்பதால் அறமில்லாத செய்கைகளை செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

18/171:திருக்குறள்-வெஃகாமை

Image
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கேன் தரும்.ஒருவன் நடுநிலைமையின்றி பிறர் பொருளை கவர நினைத்தால் அந்த ஆசை அவன் குடியை அழித்து அப்பொழுதே பல தீங்குகளைக் கொடுக்கும்.மனிதர்கள் நடுநிலையின்றி இன்னொருவரின் சொத்துக்கள் மீது ஆசைப்பட்டு கொண்டு செல்ல நினைத்தால் அந்த ஆசை ஆனாது அவர்களின் குடும்பத்தையே அழிக்க நேரிடும் அத்தோடு பல விதமான தீங்குகளையும் விளைவிக்க கூடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .