1/9:திருக்குறள்-கடவுள் வாழ்த்து
1/9: திருக்குறள்: கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. பொருள்: எண்குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, புலன்கள் இருந்தும் தன் உணர்வுகளை இழந்த பொறிகளைப் போல எந்தப் பயனும் இல்லாததாகும். விரிவாக்கம்: மனிதர்களாகப் பிறந்தவர்கள் தங்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உடல் உறுப்புகளையும் புலன்களையும் நல்வழியில் பயன்படுத்த வேண்டும். இறைவனின் நன்னெறிகளை எண்ணித் தலைவணங்காத மனிதர்கள், கண் இருந்தும் பார்க்காதவர்கள் போலவும், காது இருந்தும் கேட்காதவர்கள் போலவும், உணர்ச்சியற்ற ஜடப்பொருளுக்குச் சமமானவர்களே என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம். English Translation: Thirukkural: Koil Poriyil Gunamilave Enkunathaan Thaalai Vanangaath Thalai. Meaning: The head that does not bow before the Lord of eight attributes is as useless as sensory organs that have lost their power of perception. Explanation: Human senses and intellect are meant to be used for higher purpose and devotion. A mind and body that refuse to acknowl...