Posts

Showing posts from April 11, 2020

106/1060:திருக்குறள்-இரவு

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. இரப்பவன் சினமற்றவனாய் இருந்தல் வேண்டும் அவனுடைய வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.யாசிப்பவர்கள் கோபமற்றவர்களாக வாழ்தல் வேண்டும் அதுவே அவர்களின் வறுமை நிலையை அவர்களுக்கு உணர்த்தும் வாழ்வியல் பாடமாக அமைந்துள்ளதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1059:திருக்குறள்-இரவு

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக்கடை. இரத்தலை விரும்புபவர் இல்லையென்றால் கொடுப்போர்க்கு என்ன புகழ் உண்டாகும் ? யாசிப்பவர்கள் இந்த உலகில் இல்லையென்றால் கொடைவள்ளல்களுக்கு என்னதான் புகழ் கிடைக்க போகின்றது அதனால் யாசிப்பவர்கள் இந்த உலகில் வாழ்த்தால்தான் கொடுப்போர்க்கும் புகழென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1058:திருக்குறள்-இரவு

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. இரப்பவர் இல்லையாயின் இப்பெரிய உலகத்தில் உள்ளோரின் நடமாட்டாம் மரபொம்மை கயிற்றால் இயக்கப் படுவது போன்றதாகும்.பணக்காரர்களை ஏழைகள் நெருங்கி யாசித்து விடக்கூடாது என எண்ணுகின்ற பணக்காரர்களுக்கும் உயிரற்ற பொம்மைகளை நூல்கொண்டு ஆட்டி ஆசைப்பதுக்கும் வேறுபாடே கிடையாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1057:திருக்குறள்-இரவு

இகழ்ந்தெள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் மனம் உள்ளுக்குள்ளேயே மகிழும் தன்மை உண்டாகும்.தானம் வாழங்குபவர்களை கண்டால் தரக்குறைவாக பேசாமலும் இகழ்ச்சி செய்யாமலும் மனிதமனங்கள் மனதுக்குள்ளேயே மகிழ்ந்து கொள்ளுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1056:திருக்குறள்-இரவு

கரப்பிடும்மை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.தம்மிடம் உள்ளதை ஒளிக்கும் குணம் அற்றோரைக் கண்டால் வரும் துண்பங்களெல்லாம் மறையும்.தம்மிடம் உள்ளதை இல்லையென்று சொல்லும் மனதுக்கு இல்லாதவர்களை கண்ணில் கண்டால் அவர்களுக்கு வருகின்ற துன்ப துயரங்கள் அனைத்தும் நீங்கிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1055:திருக்குறள்-இரவு

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இருப்பவர் மேற்கொள்வது.எதிரில் சென்று நின்ற அளவிலேயே மறைக்காமல் கொடுப்பவர்கள் உள்ளதாலேயே இரப்போர் இருக்கின்றனர்.நேரிலே போனால் கூட ஒழிக்காமல் கொடுத்துதவும் மனமுடைய மனிதர்கள் இந்த உலகில் வாழ்வதாலேயே தானம் பெற்று வாழும் மனிதர்களும் வாழ்வை வாழமுடிகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1054:திருக்குறள்-இரவு

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. தம்மிடம் உள்ளதை கனவிலும் மறைக்க நினைக்காதவர்களிடம் இரத்தல் வறியோர்க்கு ஈதல் போன்றது.இருப்பவற்றை இல்லையைன்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையமனிதர்களிடம் தானமாக கேட்டுவாங்குதல் ஏழைகளுக்கு ஈதல் போன்றதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1053:திருக்குறள்-இரவு

கரப்பிலா நெஞ்சின் கடன்றிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உனைத்து.கொடுப்பதற்குரிய பொருட்களை மறக்காமல் கொடுப்பது தமது கடமை என்று உணபவர்களிடம் இரத்தல் இரப்போர்க்கு ஒர் அழகு.பிச்சைகாரர்கள் வரும் போது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களை மறைத்து வைக்காது தமது விருப்பத்தோடு கொடுத்துதவத்தான் வேண்டுமென்ற மனத்திறுத்தியுடன் தானம் கொடுப்பவர்கள் கொடுத்தால் பிச்சையை எடுப்பவர்களுக்கும் மனதில் சந்தோஷமாக இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

106/1052:திருக்குறள்-இரவு

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். ஒருவருக்கு இரக்கப்பட்ட பொருள் துன்பமில்லாமல் வந்தால் இரத்தலும் இன்பத்திற்குக் காரணமாகும். பிச்சையை கொடுப்பவர் முழுமனதுடன் அதை கொடுப்பார் என்றால் அதை பெற்றுக்கொள்பவரும் மகிழ்சியாக பெற்று மகிழ்சியடைந்தால் அந்த பொருளால் இருவருக்குமே இன்பமளிப்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

106/1051:திருக்குறள்-இரவு

Image
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழியன்று.வறியவர் பொருளுள்ளவரிடம் இரத்தல் தவறில்லை அவர் பொருள் கொடுக்க மறுத்தால் அது அவர்களைக்கு பழி அன்றி இரத்தவர்க்கில்லை, ஏழைகள் பணக்காரர்களிடத்தில் பிச்சை கேட்பது என்றுமே தவறில்லை ஆனால் அவர்கள் கொடுத்துதவ விருப்பவிட்டால் அதனால் அவர்களுக்குத்தான் பாவமும் பழியும் வந்து சேருமே தவிர பிச்சை கேட்டவர்களுக்கில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.