105/1049:திருக்குறள்-நல்குரவு
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. நெருப்பில் கூட தூங்கவும் செய்யலாம் வறுமையில் சிறிதும் கண்மூட இயலாது.எரியும் தீயில் உறங்க முடிந்தாலும் வறுமை என்னும் தீயில் கொஞ்சமும் கண் மூடி உறங்கமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.