Posts

Showing posts from January 6, 2020

90/900:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.சிறப்புமிக்க பெரியவர் சினத்தால் ஆற்றல் மிக்கவர் துணையிருப்பினும் மீளமுடியாது.சிறந்த சிந்தனையும் உரமான மனஉறுதியும் உள்ள மனிதர்கள் கோபம் கொண்டெழுந்தால் எப்படியாப்பட்ட அரசாங்கமாக இழுந்தாலும் பதவியிறங்கி விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

90/899:பெரியாரைப் பிழையாமை திருக்குறள்

Image
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.உயர்ந்த கொள்கையிடையவர் சினத்தால் இடை நடுவே நிலையிழந்து வேத்தனும் அரசு இளப்பான். உயர்ந்த எண்ணங்களுடையவர்களின் கோபத்தால் இடையினில் அரசாங்கமே கலைந்து ஆட்சியில் இருந்து பதவியிறங்ககூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

90/898:பெரியாரைப்பிழையாமை திருக்குறள்

Image
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து.மலைபோன்ற வலிமையுடைய பெரியவர் பிறரை அழிக்க நினைப்பாராயின் குடி செழித்து வாழ்பவரும் அழிவர்.சிறந்த குணமுடைய மனிதர்களின் வாழ்வினை அழிக்க விரும்பும் மனிதர்கள் திறன் பட வாழ்ந்தாலும் வாழ்வினில் அழிவை எதிர்நோக்குவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

90/897:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்.தகுதி நிறைந்தவர் சினத்தால் நயமிக்க வாழ்வும் செல்வமும் என்னப்பயன் தரும்.எவ்வளவு செல்வங்களையும் சுகங்களையும் சொத்துகளையும் அனுபவித்து வாழ்த்தாலும் சிறந்த தகுதியுள்ள மனிதர்கள் கோபத்தின் முன் இவைகள் அனைத்தும் அழிந்து போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

90/896:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகவார். தீயினால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம் பெரியார்க்கு பிழை செய்தால் பிழைக்கலாகாது.எரியும் தீயில் அகப்பட்டாலும் உயிர் தப்பிக்கொள்ளலாம் பெரிய இடங்களில் தவறுகளை செய்து விட்டால் மன்னிக்கமாட்டார்கள் மன்னிப்பு என்பதே இல்லை உயிருக்கே ஆபத்தாக முடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

90/895:பெரியாரைப் பிழையாமை திருக்குறள்

Image
யாண்டுச்சென்று யாண்டு உளராகார் வெந்தப்பின் வேந்து செறப்பட்டவர்.வலிமை மிக்க வேந்தனை பகைத்துக்கொண்டவர் எங்கு சென்றாலும் வாழ்வது அரிது.சிறந்த பலம்பொருத்திய அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு இந்த உலகில் எங்கே சென்று வாழவிரும்பினாலும் அங்கே வாழ்வது கடினமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

90/894:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். திறமைமிக்க ஆற்றலுடையவருக்கு ஆற்றலற்றவர் தீமை செய்வது எமனை கைநீட்டி அழைத்தது போலாகும்.எல்லாம் தெரிந்த மனிதர்களுக்கு எதுவும் தெரியாதவர்கள் தீமையை புரிவதென்பது மரணத்தை தேவையில்லாமல் அழைத்துக்கொள்வதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

90/893:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்றுபவர் கண் இழுக்கு . பெரும் ஆற்றலுடையவரை மதித்து நாடாது போனால் பெரும் துன்பம் வரும் . நல்த்திறன் உடையவர்களை சமுதாயத்தில் மதித்து நடைமுறைபடுத்தாத சமுதாயத்துக்கு என்றும் பெரும் துன்ப துயரங்கள் வந்து சேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

90/892:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும்.பகைவரை அழிக்க நினைத்தால் அழிக்க வல்லவரிடம் முறையிடுக , தான் அழியநினைத்தால் அற நெறியற்ற வழியில் நடக்க.மனிதர்களே வாழ்வினில் பகைவர்களை அழித்திட விருப்பினால் அதற்கு தகுதியான மனிதர்களிடத்தில் சென்று முறையீடு செய்யுங்கள்.நீங்களாகவே வாழ்வினில் அழிந்து போகவேண்டுமென நினைத்தால் உங்கள் வாழ்வினில் அறநெறி தவறிநடந்தீர்களானால் உங்கள் வாழ்க்கை தானாகவே அழிந்து போகுமென எடுத்துரைக்கின்றதுதிருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

90/891:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை

Image
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுளெல்லாம் தலை.எந்தக் காரியத்தையும் முடிக்க வல்லவரின் ஆற்றலை பழிக்காதே அதுவே தன்னைக் காக்கும் முதன்மை நெறி மனிதர்களின் வாழ்க்கையில் ஆற்றுவார் ஆற்றலை அறிந்து அவர்கள் எக்காரியத்தையும் முடிக்க வல்லவர்களாயின் அவர்களின் நல் ஆக்கத்தை அவமதிக்காதிருத்தல் இருப்பதே தங்களை காத்துக்கொள்ளும் தலைசிறந்த நெறியாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.