Posts

Showing posts from January 5, 2019

47/470:திருக்குறள் - தெரிந்து செயல்வகை

Image

47/469:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

Image
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை.அவரவர் குணங்களை ஆராய்ந்து அவர்க்கேற்றார் போல் செய்யாவிட்டால் நன்மை செய்தாலும் குற்றம் வரும்.மனிதர்களின் குணங்களை அறிந்து அவரவர் குணங்களுக்கு ஏற்றமாதிரி வாழ்வினில் நடந்து கொள்ளாவிட்டால் மனிதர்கள் எவ்வளவு நன்மையை செய்தாலும் அதில் குற்றமும் குறையும் வந்து சேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

47/468:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப்படும்.ஒரு செயலை முடிப்பதற்கேற்ற வழி அறிந்து செய்யா விட்டால் பலர் துணைபுரிந்தாலும் அச்செயல் முடியாது.செய்யப்போகும் செயலை வழி தெரியாமல் தொடங்கினால் அந்த செயலை முழுதாக முடிப்பதற்கு பலரின் உதவி கிடைத்தாலும் அதை நிறைவேற்றி முடிக்க முடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.