23/228:திருக்குறள்-ஈகை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை வைத்திழக்கும் வன்க ணவர்.பொருளை சேர்த்து வைத்து பின் அதனை இழந்துவிடும் கொடுயவர் பொருளை பிறர்க்குக் கொடுத்து மகிழும் இன்பம் அறிவாரோ?மனிதர்கள் தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளையும் செல்வங்களையும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவாமல் அதை தாமே வைத்திருந்து பின்பு எல்லாவற்றையும் பறிகொடுத்து விடும் நிலமையையுடையவர்கள் மனிதர்களுக்கு கொடுத்து சந்தோஷமடைவதால் வரும் இன்பமான சுகத்தை அடைவதற்கு வாய்ப்பில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.