Posts

Showing posts from February 11, 2019

49/490:திருக்குறள்-காலம் அறிதல்

கொக்கொக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.வெற்றியை விருப்புபவன் தகுந்த காலம் நோக்கி கொக்குபோல் அமைதி காக்க,காலம் வந்ததும் அதன் அலகுபோல்  விரைந்து செயல்படுக. வாழ்வினில் வெற்றி பெற விருப்புகின்ற மனிதர்கள் வெற்றிக்கனியின் காலம் வரும் வரை ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு மீன் கொக்கின் அருகில் வந்தவுடன் சொண்டுகள் செயல்படுவது போல செயல்படவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

49/489: திருக்குறள்- காலம் அறிதல்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.பகைவரை வெல்லக்கருதுபவன்,கிடைப்பதற்கரிய காலம் கிடைக்குமானால்,செயற்கரிய வற்றை செய்து முடிக்கவேண்டும். வாழ்வினில் விரோதிகளை வெல்லவேட்டுமென விரும்பினால் நல்ல காலம் கிடைக்கும் போதே காலத்தின் தன்மையை அறிந்து வெற்றிகொண்டு விடவேண்டும் அதுவே சிறந்த காலமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

49/488:திருக்குறள்-காலம் அறிதல்

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. பகைவரைக் காணும் பொழுது பணிதல் நன்மை காலம் வரும்பொழுது  அவரை கவிழ்த்தல் எளிது.இந்த உலகத்தின் மனித வாழ்க்கைக்குள் பகைவர்கள் வரக்கூடும் அப்படி பகைவர்களை காணும்பொழுது அவர்களிடத்தில் பணித்து செல்லுதல் வாழ்க்கைக்கு நல்லதே வேறு நல்ல நேரம் அமையும்போது சந்தர்ப்பம் பார்த்து அவர்களை கவிழ்த்து விடுவதே எளிதாகும்.களத்தில் கூட களநிலை எங்கள் படைக்கு சார்பற்றபோது களத்தை விட்டு படைகளை பின்வாங்கிகொண்டு வெளியேறி இன்னொரு படைப்பலம் குறைந்த நேரத்தில் எதிர்படைகளை வெற்றி கொள்வதே யுத்த தந்திரமென எடுத்துரைக்கின்றது திருகுறள்.தினமும் ஒரு குறளும் பொருளும்  விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

49/487::திருக்குறள் -காலம் அறிதல்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளியவர். அறிவுடையோர் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் காலம் பார்த்து கொதித்தெழுவர்.அறிவுடைய மனிதர்கள் தங்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உடனே வெளிப்படுத்தி கோபத்தை காட்டிக்கொள்ளாது நல்ல நேரத்தை மனதில் கொண்டே எதிர்பார்திருந்து தங்களின் உணவின் உச்சிக்கே சென்று வெளிப்படுத்துவார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

49/486:திருக்குறள்-காலம் அறிதல்

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கதற்குப் பேருந்தகைத்து.ஊக்கம் உடையவன் ஒதுங்கி இருப்பது , சண்டைக் காடா பின் வாங்குவது போன்றதாகும்.வாழ்க்கையில் ஊக்கமுள்ளவர்கள் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிருப்பது  சண்டை பிடிக்கக்கூடிய கிடாய் ஆடு பின் வாங்கி நிற்பதுபோல் ஆகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள்.குறளின. புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

49/485:திருக்குறள்-காலம் அறிதல்

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்.உலகத்தையே ஆள நினைப்பவர் தக்க தருணம் எதிர்பார்த்து சோர்வின்றி இருப்பர். இந்த உலகத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் அந்த நல்ல நேரம் வரும்வரை சோர்வின்றி எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள் நாட்டையும் நாட்டுமக்களையும் ஆளுமை செய்து அனுபவித்து விடலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.