Posts

7/61:திருக்குறள்-மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறவறிந்த மக்கட்பேறு அல்ல பிற ஒருவன் பெற வேண்டியவற்றுள் அறிய வேண்டியவற்றை அறிய தகுந்த மக்களை பெறுவதன்றி சிறந்தது தொன்றுமில்லை.இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியதில் பெற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளவும் கெட்டித்தனமான மிகவும் அறிவுடைய பிள்ளைகளை பெறுவதை விட சிறந்தது இந்த உலகில் எதுவுமில்லையேன எடுத்துரைக்கின்றது திருக்குறள்.குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.

6:60திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு . மனைவியின் அறநெறி செயலே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பார்,நல்ல மக்களைப் பெறுதலே அம்மாங்கலத்திற்கு அழகு என்பார்.மனையாளின் சிறந்த அறநெறியே மனைக்கு சிறப்பு நல்ல வாழ்வே குடும்பத்துக்கு அழகு நல்ல பிள்ளைகளை பெற்றெடுப்பதே மங்கலமாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

6/59:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை . கற்பிற்ச் சிறந்த புகழையுடைய மனைவியைப் பெறாதவர் தம்மை இகழ்ந்து பேசுபவர் முன் பெருமிதமாக நடக்கவில்லலாது.நல்ல நடத்தையால் புகழையீட்டமுடியாத மாதர்தம்மை மனைவியாய் பெற்றவர்கள் தம்மை சமுதாயத்தில் இகழ்ந்து செப்பித்திரிபவர்கள் முன் கெளரவமான நற்பெயரை பெறமுடியாமல் அவமரியாதையுடன் வாழநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

6/58:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

பெற்றாற் பெறின்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.மனைவி, கனவணை தொழுது அவர் அன்பினைப்பெறுபவள் வானுலகில் பெரும் சிறப்பைப் பெறுவாள்.மனையாள் கணவனை வணங்கி கணவனின் அன்பை பெறுவாளானால் வானுலகம் சென்றாலும் அங்கே அவள் தனிப்பெரும் சிறப்பைப்பெறுவாள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

6/57:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை மகளிரை சிறை வைத்து காத்தலால் பயன் எதுமில்லை அவர்கள் ஒழுக்கத்தால் தம் கற்ப்பைக் காத்துக் கொள்ளும் காவலே சிறந்தது.இந்த உலகில் மனிதர்களே பெண்களை அடிமைப்படுத்தி சிறைப்படுத்தி வாழவைப்பதால் பெண்ணின் பெண்மையை காத்துவிடமுடியாது பெண்கள் தங்கள் மானத்தை தாங்களே தங்கள் வாழ்வின் ஒழுக்கத்தால் காத்துக்கொள்வதே பெண்களின் வாழ்விற்க்கு சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

6/56:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்வலாள் பெண்.தன் கற்பையும்,தன்னையும்,கணவனையும் காத்து இருவரின் புகழ் நீங்காமல்,தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே மனைவி.இல்லத்தரசி என்பவள் கற்புநெறிதவறாது தன் கணவனோடு தானும் வாழ்க்கையில் வாழ்ந்து தன் குடும்பக்கடமைகளையும் புகழ்பட செய்து இருவரும் இந்த உலகில் சிறந்த குடும்பமாக வாழ்ந்தால் அவளே சிறந்த இல்லத்தரசியாவாள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

6/55:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

தெய்வந் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை. கடவுளை வணக்காமல்,கணவனை வணங்கியெழுபவள் பெய்யென சொல்ல பெய்யும் மழை.தெய்வங்களை வணங்காது கணவனையே கண் கண்ட தெய்வமாக வணங்கி துயில் எழும் பெண்கள் வான் மழையை பெய்யென சொல்லி அழைத்தால் பொழியும் வான் மழை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் .