Posts

17/170:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும்இல்.பொறாமைக் கொண்டு செல்வம் படைத்துப் பெரியவரானதுமில்லை அது இல்லாதவர்கள் செல்வ வளர்ச்சியில் குறைந்தாருமில்லை.பொறாமை உள்ளம் கொண்டு செல்வம் சேர்ந்து இந்த உலகில் உயர்ந்தவர்கள் யாருமில்லை செல்வமில்லாதவர்கள் தங்களின் வாழ்கையில் செல்வ உயர்வில் குறைந்தவர்களுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/169:திருக்குறள்-அழுக்காறாமை

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செல்வியான் கேடும் நினைக்கப்படும்.பொறாமை உடையவனது செல்வமும் செல்வம் படைத்தவனது வறுமையும் சென்ற வினைப்பயன் என்று ஆராய்ந்துக் கருதப்படும்.பொறாமை உள்ளம் கொண்டவர்களுடைய செல்வமும் பணம் படைத்தவர்களின்  இல்லாமையையும் போன வினைப்பயன் என அலசி அறிந்து கருதப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/168:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்காறு என ஒரு பாவி திருச்சென்றுத் தீயுழி உய்த்து விடும் . பொறாமை என்னும் கொடுமையில் ஒப்பற்ற பாவி தன்னை உடையவனது செல்வத்தை கெடுத்து இப்பிறவியிலும் துன்பத்துள் தள்ளிவிடும்.பொறாமை என்ற கொடிய நோய் கொண்ட மனிதர்களின் செல்வமெல்லாம் அழிந்து போகும் அத்தோடு இந்த மானிடப்பிறவியிலேயே தீராத துயரத்தில் தள்ளிவிடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/167:திருக்குறள்-அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டி விடும்.பொறாமை உடையவனைத் திருமகளும் தான் பொறுக்க முடியாதவளாகித் தன் தமக்கையாக மூத்தவளுக்குக் காட்டிவிட்டு அவள் அகன்று விடுவாள்.பொறாமை உள்ள மனிதர்களை இலட்சுமியும்தான் தாங்கமாட்டாதவளாகித் தனது மூத்த தேவியிடம் (மூதேவிக்கு)அனுப்பி விட்டு தான் அங்கிருந்து சென்று விடுவாள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/166:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பத்தூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதை பொறாமையால் தடுப்பவர் அவர் உடுக்கும் உடையும் உணவுமின்றி வருந்துவர். மனிதர்களின் வாழ்வில் பொறாமை என்பது அழுக்கு நிறைந்த மனம் மற்றய மனிதர்களின் வாழ்வின் சிறப்புகள் கண்டு மகிழ்சியடையாது பொறாமை கொண்டு அவர்கள்மீது வெறுப்பு உணர்வை ஏற்படுத்திக்கொள்வது இப்படியான மன ஆற்றல் உள்ள மனிதர்கள் உண்மையிலேயே மக்களுக்கு உதவி செய்ய முற்படுகிறன்போது அதை தடுத்து விட முயற்சிகள் செய்வார்கள் இப்படியான மனிதர்கள் தங்களின் வாழ்வில் உணவு உடையின்றி வருந்தி வாழ நேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

17/165:திருக்குறள் -அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது  பொறாமையுடையவனுக்கு அவன் பகைவர் கேடு செய்யத்தவறினாலும் அவனுடைய பொறமையே அவனுக்கு துன்பம் கொடுக்கும் .  பொறாமை உள்ள மனிதர்களுக்கு அவர்களின் பகைவர்கள்தான் கேடு செய்யவேண்டுமென்றில்லை அவர்களின் அழுக்காறு குணமே அவர்களை அழித்துவிடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/164:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம்படுபாக்கும் அறிந்து.தீய வழியால் துன்பம் ஏற்படுவதை உணர்ந்த அறிவுடையார் பொறாமையின் பொருட்டு பிறக்கு தீங்கு செய்யார்.மனிதர்கள் மீது பொறாமை கொள்வதால் துன்பம் வந்து சேரும் அத்துன்பம் வராமல் இருக்கு அறிவுடையார் பொறாமையான செயல்களை பிறருக்கு செய்யாதிருத்தல் சிறந்த மனித வாழ்வுக்கு வழியமைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .