Posts

19/187:திருக்குறள் -புறங்கூறாமை

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி  நட்பாடல் தேற்றாதவர். இனிய சொற்கள் பேசி மகிழத் தெரியாதவர் பழிச்சொல்லி தன் உறவினரையும் பிரித்து விடுவர். நல்லவார்த்தைகள் சொல்லி இனிதாக வாழத்தெரியாத மனிதர்கள் பழிச்சொற்களை சுமத்தி தங்களின் உறவினர்களையே  விலக்கி  வாழ்வினில் வாழ முன்ப்படுவார் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/186:திருக்குறள் -புறங்கூறாமை

பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் . ஒருவனுடைய குற்றங்களை கூறுகின்றவனது இழிச்செயல்களை மற்ரவர் ஆராய்ந்து எடுத்துக் கூறுவர்.மற்ரவர்கள் மீது குறை குற்றங்களை பேசித்திரிபவர்களின் கடுமையான குற்றச்செயல்களை மக்கள் ஆராய்ந்து மற்ரவர்களுக்கு எடுத்துச்செல்லுவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

19/185:திருக்குறள்-புறங்கூறாமை

அறஞ் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்.ஒருவன் பழித்துச்சொல்லும் குணத்தைக் கொண்டு அவன் அறமற்றவன் என்பதை அறிந்து கொள்ளலாம்.மனிதர்களில் வாழ்க்கை வரலாற்றில் அறநெறிகளை விளக்கமாக எடுத்து கூறும் நெஞ்சங்கள் இன்னொரு மனிதர்களின் வாழ்வை பற்றி தாழ்த்தி பேசும் போது அவர்கள் அறமில்லாத மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/184:திருக்குறள் -புறங்கூறாமை

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல்.ஒருவன் உன்முன்னே கடுமையாகப் பேசினாலும் அவன் இல்லாத போது இகழ்ந்து பேசுதல் கூடாது.மாந்தர்கள் யாரேனும் உங்கள் மீது கோபம் கொண்டு முகத்துக்கு நேராக உங்கள் குறைகளையும் குற்றங்களையும் கடுமையாகச் சாடக்கூடும் அப்படி அவர்கள் செய்தாலும்.பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக்குறை கூறுவது தவறாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

19/183:திருக்குறள்-புறங்கூறாமை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலில் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் பிறரைப் பழித்துப் பேசி உயிர்வாழ்வதைவிட இறப்பதால் அறத்தின் பயன்கிட்டும்.மனிதர்கள் பார்க்கும் இடத்தில் ஒரு மாதிரி பேசியும் பார்க்காத இடத்தில் வேறுறோரு மாதிரி பேசி வாழும் மனிதர்கள் வாழ்வதை விட இறந்தே போனால் சமுகத்துக்கு நலன் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/182:திருக்குறள்-புறங்கூறாமை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. அறம் தவறி தீங்குச் செய்வதினும் தீமையானது பின் இகழ்ந்துப் பேசி, முன்புகழ்ந்து பேசுவதாகும். மனிதர்கள் மனிதர்களை நேரில் சந்திக்கும் போது நன்றாக சிரித்து சந்தோஷமாக பேசுவார்கள் அதே மனிதர்கள் அகன்ற பின் அவர்களை பற்றி இகழ்ந்து செப்பித்திரிவது சிறந்த வாழ்க்கை நெறிகள் அல்ல என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/181:திருக்குறள்-புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிய . ஒருவன் அறத்தைப் பழித்து தீமைச் செய்யினும் அவனைப் பழிச் சொல்லாதவன் என்று கூறக்கேட்டால் இனிது.மக்கள் சமுதாயத்தில் அறநெறிகளை கூறி பின்பற்ற விட்டாலும் மற்றைய மக்களைப்பற்றி புறம்கூறாமல் இருக்கின்றார்கள் என்று கேட்டால் இனிதே. என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.