Posts

23/230:திருக்குறள்-ஈகை

சாதலின் இன்னா தில்லை இனித்தூஉம் ஈதல் இயையாக் கடை வறியவர்க்கு உதவ இயலாத போது துன்பமான சாவையும் மேற்கொள்ளுதல் இனிது. மனிதர்களுக்கு இறப்பதை விட மெய்வருத்தம் தரக்கூடியது வேறேதுவுமில்லை ஏழைகளுக்கு உதவிகளை செய்யமுடியாத நிலையில் அதி துன்ப துயரமான இறப்பு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுதல் இனிதேயாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

23/229:திருக்குறள்-ஈகை

இரத்தலின் என்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் .தேடிச் சேர்த்த உணவைத் தான் மட்டு தனித்துண்பது இரத்தலைவிடக் கொடியது .மனிதர்கள் தாங்கள் கஸ்டப்பட்டு உழைத்து தேடிவந்த செல்வதில் வாங்கி வந்த உணவுகளை பிறருக்கு வழங்காமல்  தாங்களே தனியாக உண்ணுதல் வறுமையில் பிச்சை எடுப்பதை விட துன்பங்களையும்  துயரங்களையும் தரக்கூடியதாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

23/228:திருக்குறள்-ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை வைத்திழக்கும் வன்க ணவர்.பொருளை சேர்த்து வைத்து பின் அதனை இழந்துவிடும் கொடுயவர் பொருளை பிறர்க்குக் கொடுத்து மகிழும் இன்பம் அறிவாரோ?மனிதர்கள் தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளையும் செல்வங்களையும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவாமல் அதை தாமே வைத்திருந்து பின்பு எல்லாவற்றையும் பறிகொடுத்து விடும் நிலமையையுடையவர்கள் மனிதர்களுக்கு கொடுத்து சந்தோஷமடைவதால் வரும் இன்பமான சுகத்தை அடைவதற்கு வாய்ப்பில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

23/227:திருக்குறள்-ஈகை

பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது . பிறர்க்கு கொடுத்துண்ணும் பண்புள்ளவனை பசி என்னும் தீய நோய் வருத்துவதில்லை. மனிதர்கள் தங்களுக்கு கிடைத்த உணவுகளை எல்லோருக்கும் பகிர்ந்துண்ணும் பழக்க வழக்கங்களை கொண்ட மனிதர்களை வறுமை என்ற இல்லாமை வாழ்வினில் என்றுமே நெருங்காதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

23/226:திருக்குறள்-ஈகை

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. ஏழைகளின் பசியை போக்கும் பேராற்றல் வேண்டும் அதுவே செல்வந்தர்க்கு சேமிப்பிடமாகும்.வாழவழியற்ற மக்களின் பசி பட்டினியைப் சமுதாயத்தில் போக்கவேண்டும் அப்போதுதான் செல்வமுடையவர்களின் செல்வங்கள் செல்வந்தர்களின் நின்மதியான ஓய்வுக்காலங்களில் உதவும்வகையில் ஒதுக்கி வைக்கும் களஞ்சியமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

23/225:திருக்குறள்-ஈகை

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.தமக்கு நேரும் பசியை பொறுப்பது தவவலிமையை பெற்றவர்க்கு பெருமை அதனினும் பெருமை பிறர் பசியை ஆற்றுவது.தவச்செயலில் சிறந்தவர்களை விட பட்டினியை பொறுத்துக் கொள்ளும் செயலை விட வாழ்வினில் பட்டினியால் வாழும் மனிதர்களுக்கு உணவளித்து பட்டினியை போக்கும் அறத்தின் ஆற்றலே மனித வாழ்க்கையில் சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

23/224:திருக்குறள்-ஈகை

இன்னாது இரக்கம் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. இரப்பவரின் மகிழ்ச்சியைக் காணும் வரை இரக்க வைப்பது கொடுப்பவர்களுக்கு இனியதல்ல. எதாவது உதவிகளை கேட்டு வந்தவர்களுக்கு முகத்தில் மகிழ்ச்சி வரும்வரை இல்லையென்று சொல்லாமல் உதவி செய்து அனுப்பவேண்டும் ஆனாலும் உதவி வேண்டி வந்தவர்களின் மகிழ்வை கண்டு சந்தோஷபடுதல் நல்லமனிதர்களின் பண்பல்ல என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .