Posts

31/310:திருக்குறள்-வெகுளாமை

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. சினத்தையுடையவர் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை ஒழித்தவர் இறப்பையே ஒழித்தவராவார்.கோபமுடைய மனிதர்கள் உயிர்கள் இருந்தும் இல்லாதவர்களே வெகுளியில்லாத மனிதர்கள் மெய்ஞானம் கொண்டவர்களாகவும் ஞானிகளையும் துறவிகளையும் போல உயிர் நீத்தலையே வெல்லக்கூடிய வாழ்வியல் ஞானம் கொண்டு இந்த உலகில் நிலைத்து வாழ்வார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

31/309:திருக்குறள்-வெகுளாமை

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.ஒருவன் மனத்தினால் ஒருபோதும் கோபம் கொள்ளாதிருக்கவேண்டும். வாழ்வினில் நெஞ்சத்தில் மனிதர்கள் வெகுளி கொள்ளாதிருந்தால் செல்வங்கள் அவர்களை தேடிவரும் கோபம் கொள்வதால் வாழ்வின் சிறப்பே அழித்து போகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

31/308:திருக்குறள்-வெகுளாமை

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.ஒருவன் தன்னை பெரும் நெருப்பில் இட்டாற் போன்ற பெரும் தீங்கு செய்தாலும் அவனிடம் கோபம் கொள்ளாதிருக்கவேண்டும்.மானிடர்களின் வாழ்வில் மனிதர்களுக்கு மனிதர்கள் தீமைகள் புரிந்து தீயை போல் சுட்டெரித்தாலும் தீயில் வீழ்ந்து எரிவது போல் தீங்கானாலும் அதை மன்னித்து தீமைகள் புரிகின்றவர்கள் மீது சினம் கொள்ளாதிருக்கவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

31/307:திருக்குறள்-வெகுளாமை

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைத்தான் கைபிழையா தற்று.கோபத்தை தன் வலிமையாகக் கொண்டவன் கெடுவது கையை நிலத்தில் அறைந்தவன் துன்பம் அடைதல் போன்றதாகும்.மனிதர்களின் வாழ்நாட்களில் சினத்தையே சிந்தனையாக கொண்டவர்கள் தாங்களும் சிராளிந்து சமுதாயத்தையும் சிராளிக்கமுற்ப்படுவார்கள் அவர்கள் கொள்ளுகின்ற கோபமானது பூமியின் மீது தங்கள் கையால் அடிக்கும்போது  கைக்கு ஏற்படும் வலியை போன்றதாகுமென எடுத்துரைக்கின்றதுகிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

1/7:திருக்குறள் -கடவுள் வாழ்த்து

தனக்குவமை இல்லாதான் தாள்சேழ்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.ஒப்பற்ற உயர்வுடைய திருவடியை நினைப்பவரன்றி மற்றவர்களால் மனக் கவலையை போக்க இயலாது.கடவுளின் மேல் பக்தி கொண்டு நம்பிக்கையுடன் திருவடிகளை வணங்கிவருபவர்களுக்கு மனக்கவலை என்றும் வந்து சேராது.கடவுளின் திருவடிகளை வணக்கமறுக்கின்றவர்களுக்கு மனக்கவலையை என்றும் போக்க இயலாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

31/306:திருக்குறள் -வெகுளாமை

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடம்.சினமென்னும் தீ அதைக்கொண்டவனையும் அதற்கு துணையாகிய சினத்தையும் அழிக்கும்.மனிதர்கள்  மேற்கொள்ளுகின்ற கோபம் என்பது சேர்ந்தவர்களையே எரித்துவிடும் தீ அதை மேற்கொள்ளுகின்றவர்களையே என்றும் சென்றடையும் அதற்கு சார்பாகியவர்களின் கோபத்தையும் நெருப்பாக சுட்டு அழித்துவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.                      

31/305:திருக்குறள்-வெகுளாமை

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னேயே கொல்லும் சினம்.ஒருவன் தான் வாழவேண்டின் சினத்தை ஒழிக்க வேண்டும் இல்லையேல் சினம் அவனையே அழித்துவிடும்.மனிதர்களின் வாழ்வுதனில் சினம் கொள்வது வளமையானது அச்சினம் அதிகமாக இருத்தல் கூடாது கோபம் கொள்ளும் மனிதர்கள் தாங்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் கோபங்களை அடக்கிக்கொள்ள வேண்டும் அடக்கவிட்டால் அந்த கோபமானது எதிரியாக மாறி மனிதர்களின் வாழ்வையே அழித்து விடும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .