Posts

32/313:திருக்குறள்-இன்னா செய்யாமை

Image
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்.தான் துன்பம் ஏதும் செய்யாதிருக்க தனக்கு தீங்கு செய்தவர்க்கும் துன்பம் செய்யின் தன்னை நீங்க துன்பம் வந்து சேரும். மனித வாழ்வில் மனிதர்களுக்கு மனிதர்கள்  துன்ப துயரங்களை விளைவிப்பதுண்டு தாங்கள் ஏனையவர்களுக்கு தீமைகள் எதுவும் புரிந்து துயரத்தில் தள்ள விட்டபோதிலும் உங்களுக்கு துன்ப துயரங்களை தந்தவர்களுக்கு நீங்கள் துன்பமானவற்றை புரிந்தால் அது உங்களை ஆழ்ந்த துன்பத்திலேயே ஆழ்த்தி விடக்கூடிய தீய செயல்கள் உங்களை வந்து அடையுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

32/312:திருக்குறள்-இன்னா செய்யாமை

கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா செய்யாமை மாசற்றார் கோள்.ஒருவன் தன்மீது பகைக் கொண்டு துன்பம் செய்தாலும் அவனுக்கு தீங்கு செய்யாமை நல்லோர் கொள்கை.மனிதர்கள் ஆகிய நீங்கள் இந்த உலகில் யாரும் உங்கள் மீது பகைகொண்டு தீங்குகளையும் துன்பங்களையும் உங்களுக்கு விளைவித்தாலும் அவர்களுக்கு நீங்கள் தீங்குகளை செய்யாதிருத்தல் உங்கள் வாழ்வில் நல்ல கொள்கைகான பலனை அடைவீர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

32/311:திருக்குறள்- இன்னா செய்யாமை

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள்.சிறப்புடைய பெரும் செல்வம் கிடைப்பதாயினும் பிறர்க்கு தீமை செய்யாமை தூயவர் கொள்கை.வாழ்வினில் மிக சிறப்புடனும் செல்வாக்குடனும் உழைத்து வாழும் போது சிறந்த செல்வங்கள் வந்து செருமாயின் சமுதாயத்தில் வசிக்கின்ற மற்றவர்களுக்கு தீங்குகளை செய்யாது வாழும் மனிதர்களே இந்த பிரபஞ்சத்தில் சிறந்தவர்களும் சிந்தனையாளர்களும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

31/310:திருக்குறள்-வெகுளாமை

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. சினத்தையுடையவர் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை ஒழித்தவர் இறப்பையே ஒழித்தவராவார்.கோபமுடைய மனிதர்கள் உயிர்கள் இருந்தும் இல்லாதவர்களே வெகுளியில்லாத மனிதர்கள் மெய்ஞானம் கொண்டவர்களாகவும் ஞானிகளையும் துறவிகளையும் போல உயிர் நீத்தலையே வெல்லக்கூடிய வாழ்வியல் ஞானம் கொண்டு இந்த உலகில் நிலைத்து வாழ்வார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

31/309:திருக்குறள்-வெகுளாமை

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.ஒருவன் மனத்தினால் ஒருபோதும் கோபம் கொள்ளாதிருக்கவேண்டும். வாழ்வினில் நெஞ்சத்தில் மனிதர்கள் வெகுளி கொள்ளாதிருந்தால் செல்வங்கள் அவர்களை தேடிவரும் கோபம் கொள்வதால் வாழ்வின் சிறப்பே அழித்து போகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

31/308:திருக்குறள்-வெகுளாமை

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.ஒருவன் தன்னை பெரும் நெருப்பில் இட்டாற் போன்ற பெரும் தீங்கு செய்தாலும் அவனிடம் கோபம் கொள்ளாதிருக்கவேண்டும்.மானிடர்களின் வாழ்வில் மனிதர்களுக்கு மனிதர்கள் தீமைகள் புரிந்து தீயை போல் சுட்டெரித்தாலும் தீயில் வீழ்ந்து எரிவது போல் தீங்கானாலும் அதை மன்னித்து தீமைகள் புரிகின்றவர்கள் மீது சினம் கொள்ளாதிருக்கவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

31/307:திருக்குறள்-வெகுளாமை

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைத்தான் கைபிழையா தற்று.கோபத்தை தன் வலிமையாகக் கொண்டவன் கெடுவது கையை நிலத்தில் அறைந்தவன் துன்பம் அடைதல் போன்றதாகும்.மனிதர்களின் வாழ்நாட்களில் சினத்தையே சிந்தனையாக கொண்டவர்கள் தாங்களும் சிராளிந்து சமுதாயத்தையும் சிராளிக்கமுற்ப்படுவார்கள் அவர்கள் கொள்ளுகின்ற கோபமானது பூமியின் மீது தங்கள் கையால் அடிக்கும்போது  கைக்கு ஏற்படும் வலியை போன்றதாகுமென எடுத்துரைக்கின்றதுகிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.