Posts

36/351:திருக்குறள்-மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.மெய்ப்பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருளைன்று அறிந்தவர்க்கு சிறப்பில்லா பிறப்பு உண்டாகும் . மனிதவாழ்வியல் நெறிகளில் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.அதுவே நல்ல அறிவுள்ள பிறப்பில்லை என்பதை இந்த வையகத்துக்கு அறியத்தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழ்மொழியாகட்டும்.

35/350:திருக்குறள்-துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.பற்றில்லா இறைவனின் பக்தியை மனதிற்கொள்ள வேண்டும் ,அதுவே உலக ஆசைகளை துறக்க வழி.வாழ்வினில் மனிதர்கள் இறைவன் மீது பக்தி கொள்ளாமல் இருந்தால் பக்திகளை கொள்ளல் வேண்டும் அந்த பக்தியினாலேயே இந்த பிரபஞ்சத்தில் அளவுக்கு மிகுந்து கிடக்கின்றன அபிலாசைகளை விட்டு விட்டு தெய்வத்தின் மீது அருள் நாட்டம் கொள்ள வழியமைக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

35/350: திருக்குறள்-துறவு

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றும் நிலையாமை காணப்படும்.பற்றற்றவனை மறுபிறப்பும் விடும் பற்றுடையவன் மீண்டும் பிறந்து துன்படும் நிலை உண்டாகும்.உலக சுகபோக வாழ்வில் பிடிப்பில்லாத மனிதர்களை மறு பிறவியும் விட்டு விடும் ஆனால் பிடிப்புகள் உள்ள மனிதர்களை மீண்டு இந்த பிரபஞ்சத்தில் பிறக்க வைத்து சுகபோகங்களை நினைக்க வைத்து துன்பங்களையும் துயரங்களையும் உருவாக்கி வாழ்வினில் வாட்டி வதைக்குமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

35/348:திருக்குறள்-துறவு

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் .முற்றும் துறந்தவர் விடடைவர் அவ்வாறு துறக்காதவர் பிறப்பென்னும் வலையில் வாழ்வார்.வாழ்வினில் முற்றிலும் துறந்து முனிவரானவர்கள் வாழ்க்கான விடையை தெரிந்து கொண்டிருப்பார்கள் அத்தகையாக வாழ்வினை அறிந்து கொள்ளாதவர்கள் மனித வாழ்வியல் மாய வலையில் வீழ்ந்து தாம் பிறந்த பிறப்பின் பலனை அனுபவிக்க வாழ்ந்துகொண்டிருப்பார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

35/347:திருக்குறள்-துறவு

பற்றி விடாஅ இடுப்பைகள் பற்றினப் பற்றி விடாஅ தவர்க்கு.ஆசைகளை விடாது கொண்டிருப்பவரை துன்பம் விடாது பற்றிக்கொள்ளும்.ஆசைக்கு மேல் ஆசைகொள்ளும் மனிதர்களை துன்ப துயரங்கள் பிடித்து கொண்டு பின் தொடர்ந்து துரத்திக்கொண்டியிருக்கும் வாழ்வில் நின்மதியற்று அலையவைக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

35/346:திருக்குறள்-துறவு

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்.நான் ,எனது என்னும் ஆணவம் அழிப்பவன் தேவர்க்கும் எட்டாத உயர்ந்த உலகை அடைவான்.தாங்கள்தான் என்ற அகத்தையும் ஆணுவமும் தற்ப்பெருமையும் இல்லாத மனிதர்கள் தேவர்கள் வாழும் தேவலோகத்தையும் விட சிறந்த இடத்தை அடைந்து வாழ்வார்களென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

35/345:திருக்குறள்-துறவு

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.பிறப்பறுக்க விரும்புபவர்க்கு உடலும் தேவையற்றது எனின்,அதனால் உண்டாகும் பிற இன்பம் ஏன்? பிறந்த பயனை அனுபவித்து வாழ்ந்து முடிக்க வேண்டிய தேவை மனித உடலுக்கு உண்டு அதனால் உடலை நோய் இன்றி காப்பது அவசியம் ஆனால் பிறப்பை முடித்து கொள்ள நினைக்கும் உயிருக்கு இனி பிறப்பே வேண்டாமென்று இறப்பதனால் அந்த உடலால் உண்டாகும் இன்பங்கள் தான் அந்த உயிருக்கு ஏநோ ?