Posts

37/370:திருக்குறள்-அவா அறுத்தல்

ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.என்றும் கிட்டாத ஆசையை தவிர்த்தால் அது நீங்காத இயல்புடைய இன்பம் தரும். என்றுமே நிறைவேறாத ஆசைகளை கைவிடல் வேண்டும் அதுவே சுக வாழ்வியலுக்கான மனம் நிறைந்த மகிழ்வைத்தரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

37/369:திருக்குறள்-அவா அறுத்தல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.ஆசையென்னும் பெருந்துன்பம் ஒழித்தால் இடையறா இன்பம் பெருகும்.மனித வாழ்வினில் ஆசைகள் என்னும் பெரிய துன்பங்கள் இல்லாமல் போனால் இடை விடதா மகிழ்ச்சியும் இன்பமும் வந்து சேரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

37/368:திருக்குறள்-அவா அறுத்தல்

அவா இல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவா அது மேன்மேல் வரும்.ஆசையற்றவர்க்குத் துன்பமில்லை ஆசையுடையவர்க்கு துன்பம் மென்மேலும் வளரும்.ஆசைகள் இல்லாத மனிதர்களுக்கு வாழ்வில் துன்பம் என்றும் இல்லை ஆசைகள் அதிகமான மனிதர்களுக்கு துன்ப துயரங்கள் வாழ்வினில் என்றுமே வந்து சேர்ந்து கொண்டிருக்கும் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

37/367:திருக்குறள்-அவா அறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்டவேண்டும் மாற்றான் வரும்.ஆசையை அறவே அழித்துவிட்டால் நன்மைகள் நாம் விரும்பியபடி வந்து சேரும்.மனித வாழ்வினில் வருகின்றன அதிகமான ஆசைகளை அடியோடு அழித்து விட்டால் வாழ்வினில் சிறந்த நல்ல விடயங்கள் தானாகவே மனிதர்களை வந்தடையும் நின்மதியாகவும் சிறப்பாகவும் வாழ்கையை வாழலாமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

37/366:திருக்குறள்-அவா அறுத்தல்

37/366: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.ஆசைவராமல் அஞ்சி வாழ்வதே அறமாகும் தோல்வி கண்டு ஒருவனை வஞ்சிப்பதும்ஆசையே. ஆசையென்னும் பாவத்தில் வீழ்ந்து வாழ்க்கை நடத்தாது வாழ்வதே மிகச்சிறந்த வாழ்வியல் அறமாகும் அதில் தோல்வியை கண்டு வாழுகின்ற மனிதர்களை வஞ்சித்து நிற்பது அவர்களின் ஆசையே ஆகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

37/365:திருக்குறள்-அவா அறுத்தல்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்.உலகப்பற்றற்றவர் ஆசைவிட்டவராவார் மற்றவர் முழுமையாக பற்றுவிட்டவரில்லை.மனிதர்கள் வாழுக்கின்ற உலகத்தை வெறுத்தவர்கள் எதிலும் பற்று இல்லாமல் முற்றிலும் துறந்து முனிவர்களாகவும் துறவிகளாகவும் வாழ்வதுண்டு ஆசையுடன் வாழ்பவர்கள் ஆசைகளை விட்டவர்கள் அல்ல அவர்கள் ஆசைகள் என்னும் பாவத்தில் வீழ்ந்து எதிலும் திறுத்தியும் நின்மதியும் இல்லாமல் இந்த உலகில் பாவ வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

37/364:திருக்குறள்-அவா அறுத்தல்

தூய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.ஆசையின்மையே மனத்ததூய்மை எனப்படும் அது மெய்ப்பொருள் வேண்டதானே வரும். மனிதர்களின் மனத்தில் ஆசைகள் இல்லாமல் வாழ்ந்தால்தானே மனம் தூய்மையடையும் மனத்தூய்மையடைய வேண்டுமானால் ஆசைகள் இல்லாது வாழ்ந்து வாந்தாலே அதற்கான பலனை அடைய முடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.