Posts

38/378:திருக்குறள்-ஊழ் உலகமுறை

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின்.ஊழல் வரும் துன்பங்கள் நீங்குமானால் ஏழைகளும் துறவியாகிவிடுவார்கள்.மனிதர்கள் செய்கின்ற ஊழல்களால் துன்பங்கள் வந்து சேரும் அதை அனுபவிக்க வேண்டிய தேவையும் வந்து சேரும் அத்துன்பங்கள் வந்து சேராவிடின் வறியவர்களும் சந்நியாசியாகி விடுவார்கள் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

38/377:திருக்குறள்-ஊழ் உலகமுறை

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. ஒரு கோடி செல்வமிருப்பினும் ஒருவனுக்கு விதிப்பயன் இல்லையேல் அனுபவிக்க இயலாது.இந்த உலகில் மனிதர்களின் வாழ்கையில் எவ்வளவு கோடி கோடியாக செல்வம் செழித்து கிடந்தாலும் மனிதர்களின் விதிப்பயன் நல்லாக இல்லையேல் வாழ்க்கையில் சேகரித்து வைத்திருக்கின்ற செல்வத்தை வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது அதுவே அவர்களின் விதிப்பயனாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

38/376:திருக்குறள்-ஊழ் உலகமுறை

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம்.தீவழிப்பொருள் காத்தலும் நிலைக்காது நேர்வழிப் பொருள் ஒழித்தாலும் தன்னிடமே நிலைத்திருக்கும்.தீய வழியில் வந்து சேர்ந்த செல்வங்களை எவ்வளவு பாதுகாப்பாக காத்து நின்றாலும் அது என்றும் நிலைக்காது நேர்வழியில் உழைத்து சேர்த்த செல்வங்கள் ஒழித்து வைத்து பாதுகாத்தாலும் தங்களிடமே நிலைத்து நிற்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

38/375:திருக்குறள்-ஊழ் உலகமுறை

நல்லவை எல்லா அந்தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.தீயூள் உடையவர் நற்செயல் செய்யினும் தீமையும் நல்லூழ் உடையவர் தீச்செயல் செய்யினும் நன்மையும் விளையும்.மனித வாழ்வுனில் செல்வங்களை உழைக்க முற்படும் போது நன்மைகள் உண்டாவதும் தீமைகள் வந்து சேர்வதும்,தீய செயல்களில் நல்திறன் உடையவர்கள் நல்ல செயல்களை செய்தாலும் தீமையே வந்து சேரும் நல்லவர் தீமைகளை செய்தாலும் அங்கே அது நன்மையில் முடிவதே உலகின் இயல்புடைய செயல்களாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

38/374:திருக்குறள்- ஊழ் உலகமுறை

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.இரு வேறுபட்ட செல் எனும் முறை அறிவுமுறை இயல்புடையது இவ்வுலகம்.இந்த உலகில் மனிதர்களின் வாழ்வியலில் இத்தனை வகை தலைவிதி பயன்கள் உண்டு அதில் ஒன்று செல்வந்தர்களாக வாழ்வது இன்னொன்று அறிஞர்களாக வாழ்வதும் மற்றொன்று ஏழைகளாக வாழ்வதுமான தலைவிதி பயன்கள் அனைத்தும் வேறு வேறு இயல்புடைய உலகம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

38/373:திருக்குறள்- ஊழ் உலகமுறை

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.நுண்ணிய நூல் பல கற்றாலும் ஒருவர்க்கு தன் ஊழினாலான அறிவே வளரும்.மனிதர்கள் பல திறன் பெற்ற நூல்களை படித்து அறிவை வளர்த்துக்கொண்டாலும் அத்தகைய அறிவை விட மேலான தங்களின் இயற்கை அறிவே பயன் படித்தி வாழ்வதே சிறந்ததாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

38/372:திருக்குறள்-ஊழ் உலகமுறை

போதைப் படுக்கும் இழவுழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக்கடை.பொருளிழப்பிற்கான தீயூழ் அறியாமை தரும் பொருளுண்டாவதற்கான நல்லூழ் அகன்ற அறிவை தரும்.மனிதவாழ்வில் கெட்டுப்போகக்கூடிய ஊழ்வினை தொடங்கினால் சொத்துகளை இழக்ககூடும் தீவினை நல்லறிவையளிக்காது சொத்துக்கள் சேரவேண்டியிருத்தால் நல்வினை மிகுந்த அறிவை தந்து வாழ்வை சிறப்புறவைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.