Posts

39/390:இறைமாட்சி திருக்குறள்

39/390: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேத்தர்க் கொளி. கொடுக்கும் தன்மை ,அன்பு ,நேர்மை, குடிகாத்தல் இந்நான்கும் உள்ளவன் மன்னர்க்கெல்லாம் ஒளியாவான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் வறுமையை போக்கி அனைத்து மக்களையும் மூன்று நேர உணவுகளை கொடுத்து தன் நாட்டு மக்கள் என்று கவனித்து நேர்மையான முறையில் தன் நாட்டு மக்களை பாதுகாத்து பசி பட்டினி இன்றி வாழவைக்கும் அரசே உலகில் சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

39/389:திருக்குறள-இறைமாட்சி

39/389:செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைய வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.குறை கூற்றும் கேட்கின்ற பண்புள்ள மன்னது அரசின் கீழ் உலகம் தங்கும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் தேவைகளையும் குறைகளையும் கூற்றுகளை கேட்கின்ற பண்புள்ள அரசாங்கத்தை மக்கள் விரும்பி அதன் கீழ் இதுவே எங்கள் உலகம் என வரவேற்றுக்கொள்வார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

39/388-திருக்குறள்-இறைமாட்சி

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்றும் வைக்கப்படும்.முறையோடு காக்கும் மன்னனை மக்கள் இறைவனாகக் கருதுவர்.மக்களை நல்லாட்சி செய்யும் அரசாங்கத்தை மக்கள் போற்றுவார்கள் நல்லாட்சியாக நடத்தப்பட்டிருந்தால் அதே அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரலாலம் மக்களின் வரவேற்ப்பை பெற்ற அரசாக விளங்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/387:திருக்குறள்-இறைமாட்சி

இன்சொலால் ஈத்தன்னிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ்வுலகு.இனிமையாகப்பேசி பொருள் வழங்கும் மன்னன் விரும்பிய அனைத்தும் இவ்வுலகில் கிடைக்கும். இந்த உலகில் மக்களின் விருப்பப்படி நல்லாட்சி நடாத்தும் அரசாங்கங்களுக்கு அவர்கள் விருப்பிய படி அரசாட்சி நடாத்த சிறந்த மக்கள் ஆணை கிடைக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.(பின் குறிப்பு- குறள் அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி உள்ளது ஆனால் அதை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி சிந்தித்துள்ளோம் அரசன் என்பது அரசாங்கமாக மாற்றம் பெறுகின்றது .

39/386:திருக்குறள்-இறைமாட்சி

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.மக்களுக்கு எளிமையாகவும் கடும் சொல் அற்றவனாகவும் இருப்பவன் அரசை உலகம் போற்றும்.பார்ப்பதற்கு பண்பாடன அரசு மக்களை வருத்தாது மக்களை கடும் கோல் ஆட்சிபுரியாது நல்லமுறையில் நடத்தினால் நல்ல அரசு என உலகம் போற்றும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

39/385:திருக்குறள்-இறைமாட்சி

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரது. பொருளைத்தேடி சேர்த்து பாதுகாத்து காத்த பொருளை உரிய வழியில் செலவிடுவது அரசு.உலகில் அரசாங்கம் என்பது மக்களால் உருவாக்கப்பட்டது அந்த அரசு மக்களிடம் வரிப்பணத்தை அறவிட்டு அந்த வரிப்பணத்தில் பொன் பொருள் தேடிச்சேர்த்து அவற்றை சிறந்த வழியில் விரிவாக்கப்படுத்தி பாதுகாத்து கவனமாக மக்களுக்கு பயன்படும் வகையில் மக்களின் வாழ்வியலுக்கு சிறந்த வகையில் வழங்குவதே சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

39/384:திருக்குறள் - இறைமாட்சி

39/384:அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.அறநெறி தவறாது தீமைகளகற்றி .வீரம் தவறாது ஆள்பவன் அரசன்.ஒரு நாட்டை ஆழுமை செய்கின்ற அரசாங்கம் அறநெறி தவறாமல் ஆட்சி நடத்தல் வேண்டும்.அந்த நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு தீமைகள் செய்யாது மக்களை நல்வழிப்படுத்தி அரசாங்கம் நடத்தவேண்டும்.வீரம் தவறாது ஆளுமை நாடத்துகின்ற அரசுகள் சிறந்தவை அன்னிய நாட்டு படைகளுடன் போர்முனையில் வெற்றி கொண்டு ஆளுமை நிலைநாட்டுகின்ற அரசு சிறந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.