Posts

40/397:திருக்குறள்-கல்வி

40/397:யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லா வாறு. கற்றவர்க்கு எந்தநாடும் எந்த ஊரும் தன்னுடையது போன்றிருக்க இறக்கும் வரை கல்லாதிருப்பது ஏன் ? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்பதுபோல உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாடோ அல்லது ஊரோ தங்களுடையது போல இலகுவாக இருக்குமாம் இதை தெரிந்த மனிதர்கள் சாகும் வரை கல்வியை கற்காமலே வாழ்வதன் வாழ்வுதான் என்ன ? என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

40/396:கல்வி திருக்குறள்

40/396:தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.மணற்கேணி தோண்டத்தோண்ட நீர் தருவது போல் நூல்கள் கற்கக்கற்க அறிவு பெருகும்.நீர் ஊற்று இருக்குமிடத்தில் தோண்டினால் நீர் வரும் அதுபோல படித்த மக்களிடத்தில் கேட்டுப்படிக்க தொடங்கினால் கல்வியூறும் அதேபோல பல நூல்களை புரட்டிப்படித்தால் நூல்களின் அறிவு இந்த உலகில் களஞ்சியமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

40/395:திருக்குறள்-கல்வி

40/395:உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லாதவர். செல்வந்தர் முன் ஏழை போல் கற்றவர் முன்பணிந்துநின்று கற்றவரே மேலானவர் கல்லாதவர் சிறியோர். பணக்காரர்கள் முன் ஏழைகள் ஏழைகளே அதேபோல் படித்தவர்கள் முன் படிக்காதவர்கள் படிப்பறிவு இல்லாத மனிதர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

40/394:திருக்குறள்-கல்வி

உவப்பத் தலைக்கூடி உள்ளம் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.மகிழுமாறு பழகி நினைத்திருக்கும் படியாக பிரிவர் இதுவே கற்றவர் இயல்பு.மனிதர்கள் வாழ்வுதனில் மனிதர்களை சிரிக்க சிரிக்க பேசி பழகி மகிழ்வடைய வைத்து விட்டு பிரிந்தபோதும் அவர்களையே நினைத்திருக்கும்படி செயல்களை செய்து விட்டு செல்லும் மனிதர்களே உலகில் படித்தவர்களின் இயல்பான இயல்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

40/393:திருக்குறள்-கல்வி

40/393:கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.கற்றவரே கண்ணுடையவர் கல்லாதவர் முகத்தின் கண்கள் புண்போன்றது. கல்வியியலை கற்று தெளிவடைந்தவர்களே அறிவு கண் உள்ளவர்கள் கல்வியறிவில் தேர்ச்சி பெறாதவர்களின் முகத்தில் கண்கள் இருந்தும் இல்லாதவர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

40/392:திருக்குறள்-கல்வி

40/392:எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்துமாகிய இரண்டும் வாழும் மக்களுக்கு கண்போன்றது.கல்வி என்பது மனிதர்கள் வாழுகின்ற சமுதாயத்திற்கு கண்போன்றது கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பளிக்கும் எண்ணையும் எழுத்தையும் மனிதகுலம் கற்றிருக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு . பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

40/391: திருக்குறள்-கல்வி

40/391:கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.கற்கவேண்டிய நூல்களை தெளிவாகக் கற்று அந்நூல் நெறிப்படி வாழவேண்டும். கற்பவைகளை கற்கவேண்டும் அதுவும் நெறிப்பட கற்றல்வேண்டும் கற்றநூல்களின் படி சிறந்த வாழ்வியலை வாழவேண்டும் அதுவே இந்த உலகில் சிறப்பைத்தரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.