Posts

42/415:திருக்குறள்-கேள்வி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்.ஒழுக்கமானவர் சொற்களை கேட்பது வாழ்வில் வழுக்கும் போது ஊன்றுகோலாம். மனித வாழ்வில் ஒழுக்கமனாவர்களின் சொற்களை கேட்டு வாழ்க்கை நடத்துவது வாழ்வினில் வழுக்கி விழும்போது கற்றவர்களின் சிறந்த சொற்கள் ஒரு ஊன்று கோலாக அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

42/414:திருக்குறள்-கேள்வி

கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.கல்லாது இருப்பினும் கற்றவரின் சொல்லைக் கேட்டார் அதுவே துன்பக் காலத்தில் தாங்கும் துணை.வாழ்க்கையில் படிக்காதவர்களாக வாழ்ந்தாலும் படித்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு வாழ்த்து வந்தாலே துன்ப துயரங்கள் வரும்போது வாழ்வை தாங்கும் துணையாக அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

42/413:திருக்குறள்-கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.இவ்வுலகில் கேள்வி அறிவு உடையவர் அமுதம் உண்ட தேவர்க்கு ஒப்பாவர்.இவ்வுலகில் வாழுகின்ற மக்களுக்குள் யார் கேள்வி அறிவுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே இந்த உலகில் நல்லவற்றை அடைய முடியும் நல்ல நிலையிலும் வாழமுடியும் அவர்களே அமுதமுண்ட தேவர்களுக்கு ஒப்பாவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம் . வீழ்வது நாமாக இருந்தாலும் நிலைத்து இருப்பது தமிழாகட்டும்

42/412:திருக்குறள்-கேள்வி

செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.செவிக்கு கேள்வியறிவு கிடைக்காத போது வயிற்றுக்கு உணவு அளி.காதுகளுக்கு கேள்வியின் விளக்கம் கிடைக்காத போது உடலுக்கு உணவளித்தால் உடலின் பசி அகன்று காதில் கேட்கும் தன்மையை இயல்பாக்கும் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

42/411:திருக்குறள்-கேள்வி

செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந்தலை.செல்வத்தில் சிறந்தது கேள்விச் செல்வமே அச்செல்வம் எல்லா செல்வத்திலும் உயர்ந்தது.உலக மனித வாழ்க்கைதனில் பலவிதமான செல்வங்கள் உள்ளன அதில் சிறந்த செல்வம் கேள்விச்செல்வம் என்பதே ஆகும்.மனிதன் வாழும் வாழ்க்கையில் கேள்விகேட்கவேண்டும் கேள்விகேட்காது எதையும் புரிந்து கொள்ளாது செயல்படுபவர்கள் புத்திசாலிகள் இல்லை என்றே கருத்தாகின்றது கேள்விஞானம் மனிதர்களின் கொடையான செல்வம் என எடுத்துரைக்கின்றது வள்ளுவரின் திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

41/410-திருக்குறள்-கல்லாமை

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்.படித்தவருங்கும் படிக்காதவருக்கும் உள்ள வேற்றுமை எவ்வளவு எனில் விலங்குக்கும் மனிதருக்கும் உள்ள வேற்றுமை.கற்றோர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேறு பாடு கற்றவர்கள் வாழ்வியலில் முன்தங்கியிருப்பார்கள் கல்லாதவர்கள் எழுதப்படிக்க தெரியாமல் வாழ்வியலில் பின்தங்கியிருப்பார்கள் கற்றறிந்த அறிவின்றி வாழ்வார்கள் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

41/409:திருக்குறள்-கல்லாமை

மேற்பிந்தா ராயனும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.படிக்காதவர் உயர்குடியில் பிறந்திருந்தாலும் தாழ்ந்த குடியில் பிறந்த படித்தவர்க்கு ஈடாகமாட்டார்.கல்லாதவர்கள் மேல்குடியில் பிறந்து வளந்து இந்த உலகில் மேன்மையாக வாழ்க்கை நடத்தினாலும் கற்றோர்கள் கீழ்குடியில் பிறந்து ஏழ்மையாக வாழ்வியலில் வாழ நேர்ந்தாலும் கற்றோர்கள் என்பதால் மேற்குடி மக்களை விட கீழ்குடி மக்களே சிறந்தவர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.