Posts

44/435:திருக்குறள்-குற்றங்கடித்தல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்வைர்தூறு போல கெடும் குற்றம் வருமுன்னர் தடுக்காவன் வாழ்க்கை .தீ முன்னே வைக்கோற் போர்போல் அழியும். மனிதர்களின் வாழ்வில் குற்றங்கள் வரமுன் தடுக்காமல் வாழ்க்கையை நடாத்திக்கொண்டே சென்றால் அந்த வாழ்வியல் தீ முன்னே போடப்பட்ட வைக்கோல் போர்போல் எரிந்து அழியந்து விடும் அதனால் வாழும்வாழ்வை குற்றமில்லாத முறையில் வாழப்பழகவேண்டும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

44/434:திருக்குறள்-குற்றங்கடித்தல்

குற்றமே காக்க பொருளாக்க குற்றமே அற்றம் தருஉம் பகை.தாம்செய்யும் குற்றமே நமக்கு குழி தோண்டும் பகை ஆகவே குற்றத்தை கவனத்துடன் தடுப்பாயாக.மனிதர்களே இந்த உலகில் நீங்கள் குற்றச்செயல்கள் செய்யக்கூடும் நீங்கள் புரிகின்ற குற்றச்செயல்கள் உங்களையே ஒரு நாள் படுகுழியில் தள்ளிவிடும் அதனால் உங்கள் குற்றச்செயல்களை தடுத்துக்கொள்ளுங்கள் அப்படி தடுத்துக்கொண்டால் வாழ்வில் சிறப்படைவீர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

44/433:திருக்குறள்-குற்றங்கடித்தல்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வால்.சிறு குற்றம் செய்தாலும் பெரியதாக எண்ணுவர் பழிக்கும் அஞ்சும் பெரியவர்.மனிதர்களின் வாழ்க்கைதனில் குற்றம் செய்வது வளமை சிறிய குற்றம் செய்தாலும் அதை குற்றமாக மனதில் எண்ணி அதே குற்றத்தை மீண்டும் செய்யாமல் பழிவரும் என அஞ்சி வாழ்க்கையை நடத்துவதுபவர்கள் மேலோர்களின் வாழ்க்கைக்கு ஈடானவர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . எழுதுகோல் வடிவமைப்பு . பாலாஜீ பாலசுப்ரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

44/432:திருக்குறள்-குற்றங்கடித்தல்

இவறலும் மாண்பிறந்த தானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.கஞ்சத் தன்மையும் பொய்யான மானமும் தேவையற்ற மகிழ்ச்சியும் அரசனுக்கு கேடானவை. நாட்டின் தலைவர்கள் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற தாரளமான மனம் இருந்தல் வேண்டும் பொய்யான மரியாதையும் தேவையற்ற மகிழ்வும் அரசாளும் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் கேடான செயல்களாக அமையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

44/431:திருக்குறள்-குற்றங்கடித்தல்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. கர்வம் சினம் அற்ப எண்ணம் இல்லாதவருடைய முன்னேற்றமே சிறந்தது.மக்களின் வாழ்கையில் பேரும் எண்ணங்கள் நாங்களே எல்லாம் என்ற கர்வம் எமக்கே எல்லாம் தெரியும் என்ற சினம் அற்பத்தனமான சிந்தனைகள் இல்லாத மக்களிடத்தில் சிறந்த முன்னேற்றத்திற்கான வழிகள் நாட்டிலும் வீட்டிலும் சிறந்து விளங்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

43/430:திருக்குறள்-அறிவுடைமை

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.அறிவுடையவர்கள் தம் அறிவினாலேயே எல்லாம் உடையவராவர் அறிவில்லாவர்கு எல்லாம் இருந்தும் இல்லாதவரே.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்வுதனில் அறிவுடையார் என அழைக்கப்படுவது புத்தி கூர்மையான செயலை அறிவான விளக்கத்தை அளிக்கக்கூடிய மனிதர்களை இந்த உலகை அறிந்த அறிவுடையோரை பகுத்தறிவு உள்ளோரை அறிவுடையோர்கள் எல்லாம் உடையார் எனலாம் அறிவுசெல்வமில்லாதார் வாழ்வினில் எல்லாம் கிடைத்தும் இல்லாதவர்களே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

43/429:திருக்குறள்-அறிவுடைமை

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். துன்பம் வருமுன்னர் காக்கத் தெரிந்த அறிஞர்கு அதிர்சியான துன்பம் வராது.உலகத்தில் மனிதர்களின் வாழ்வுதனில் துன்பம் வருவதுண்டு அத்துன்பத்தை அறிஞர்கள் அல்லது தொலை நோக்குடையோர்கள் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றப்போல் வாழ்க்கையை வழிநாடத்தினால் மிக அதிர்சியான துன்பத்தை எதிர்கொள்ள தேவையில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.