Posts

46/457:திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் .நல்ல மனம் உடையவர் நல் ஆயுளை பெருவர். நல்ல சேர்க்கை நல்லதாக இருப்பது சிறப்பு. சிறந்த இதயம் கொண்ட மனிதர்கள் நீண்ட ஆயுளை பெறுவார்கள் அதேபோல வாழ்வினில் சிறந்த நட்பினை கொண்டவர்களின் வாழ்வே சிறந்ததாக அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். குறளின் புலமை. பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

46/456:திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனந்தூயாரக் கெச்சம் நன்றாகும் இனந்தூயார்க்கு இல்லை நன்றாக வினை.நல்ல உள்ளம் உடையவர்க்கு எஞ்சி நிற்பது புகழ் , நல்ல சேர்க்கை உடையவர்க்கு எல்லாமே நல்லதாகும். மனிதர்களில் தூய உள்ளம் படைத்தவர்களுக்கு இந்த உலகில் நிலைத்து நிற்பது புகழ் அதேபோல நல்ல நட்புடையவர்களுக்கு வாழ்வு எல்லாமே நல்லதாகத்தான் அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். குறளின் புலமை. பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

46/455:திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.உள்ளத் தூய்மையும் செயல் தூய்மையும் நல்ல சேர்க்கையினாலேயே வரும். மனிதர்களின் இதயத்தின் சிறந்த எண்ணங்களும் அதன் சிறப்பு செயல் முறைகளும் சிறந்த நட்புகளின் வாழ்வியல் சிறப்பாலேயே வந்து சேரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். குறளின் புலமை . பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

46/454:திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனத்துளது போலக்காட்டி ஒருவருற்கு இனத்துள தாகும் அறிவு. அறிவு மனதைப் பொருத்துள்ளது போன்று தோன்றும்,ஆனால் அது பழகும் கூட்டத்தை பொருத்தது. மனிதர்களுக்கு அறிவென்பது மனதை பொறுத்தாக இருந்தாலும் அது அவர்கள் சேரும் நடப்புகளை பொறுத்தே அவர்களின் வாழ்வியல் திறன் அமையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். குறளின் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

46/453:திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனத்தானாம் மாந்தாக் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். மனிதர்க்கு மனத்தினால் உணர்ச்சி உண்டு . அவன் சேர்கின்ற கூட்டத்தை பொருத்து மதிப்பும் உண்டாம். மனிதர்கள் வாழுகின்ற வாழ்வினில் மனதினால் பல விதமான உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஏற்ப்படுவதுண்டு அவர்கள் சேர்கின்ற நடப்புகளை பொறுத்தே அவர்களின் மதிப்பும் மரியாதைகளும் உண்டாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள். குறளின் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

46/452:திருக்குறள்-சிற்றினம் சேராமை

நிலத்தியல் பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு . மழைநீர் தான் விழுந்த மண்ணில் தன்மையை பெரும் மனிதர் அறிவு அவர் சேர்ந்த கூட்டத்தின் தன்மையை பெறும் . இயற்கையால் கிடைகிக்கின்ற மழைநீர் துளிகள் மண்மீது வீழ்தால் அந்த மழைத்துளிகளும் மண்நோடு சேர்ந்து தன்னுடைய தன்மையை மாற்றிக்கொள்ளும் அதுபோல மனிதர்களின் அறிவும் அவர்கள் சேருகின்றன மக்களின் அறிவு தன்மையையே பெறுவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

46/451:திருக்குறள்-சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் . பெரியவர் சிறிவரோடு பழக அஞ்சுவர் சிறியவர் சிறியாரையே நாடுவர் . கூடாத சிந்தனையுடையோரிடம் நற்பண்புகளுடையோர் வாழ்வில் இனைத்து வாழ அஞ்சுவர்: நல்ல சிந்தனையற்றவர்கள் என்றும் சிறந்த சிந்தனையுடையவர்களையே நாடி தங்களின் உறவாகவே கருதி கொள்வார்கள் என்றபோதும் சிறுமை சிந்தனையுடையவர்கள் சிறுமைக்குணம் உள்ளவர்களிடமே நாட்டம் கொள்வார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்