Posts

51/510: திருக்குறள்- தெரிந்து தெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.ஆராயாது நம்புதலும் துன்பம் , நம்பியவனை ஐயப்படுதலும் துன்பமே.மனிதர்களை நன்றாக தெரிந்து கொள்ளாது நம்புதல் துன்பத்தில் முடியும், நம்பியவர்களை சந்தேகம் கொண்டு பார்த்தல் சிறந்ததல்ல என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

51/509:திருக்குறள்- தெரிந்து தெளிந்து

தேறற்க் யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.ஆராயாது எவரையும் நம்புதல் கூடாது. ஆராய்ந்த பின்னும் நம்பும் பொருளை நம்பவேண்டும். மனிதர்களை தெரிந்து தெளிவாக நம்பக்கூடிய நம்பிக்கை வரும் வரை நம்புதல் நல்லதல்ல நம்பியபின் சந்தேகம் கொள்ளக்கூடாது நம்புதல் நன்மைதருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

51/508:திருக்குறள் - தெரிந்து தெளிதல்

தேரான் பிறைனைத் தெளித்தான் வழிமுறை தீராஇடும்பை தரும.அயலான் ஒருவனை ஆராயாது நம்பினால் அவருக்கும் அவர் சந்ததியினருக்கும் துன்பம் தரும். வாழ்வினில் தெரியாத மனிதர்களை சரிவரத்தெரிந்து கொள்ளாது நம்பிக்கை கொண்டால் நம்பியவர்களும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் துன்பங்கள் வந்து சேருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் 

51/507:திருக்குறள்- தெரிந்து தெளிதல்

காதன்மை கந்தா அறிவறிந்யார்த் தேறுதல் பேதமையெல்லாம் தரும்.அன்பின் காரணமாக அறிவற்றரை உடன் கொள்ளுதல் அறியாமையைத் தரும். அன்பு உள்ளம் கொண்டு அறிவில்லாத மனிதர்களை உறவாக உரையாடி ஏற்றுக்கொள்ளுதல் என்றென்றும் அறியாமையையே தருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் 

51/506:திருக்குறள்-தெரிந்து தெளிதல்

51/506:அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.குற்றமில்லாதவரை நம்புதல் கூடாது ஏனெனில் அவர் எந்த தொடர்பும் அற்றவர் பழிக்கும் அஞ்சமாட்டார்.தெரியாதவர்களை சமுதாயத்தில்  நம்பிக்கொள்வது  நல்லதெல்ல ஏன்னென்றால் அவர்கள் எதிலும் பற்று  பாசம் இல்லாதவர்கள் சமூகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் எப்பழியையும் செய்யக்கூடிய மனிதர் அதனால் நம்புதல் கூடாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

51/505:திருக்குறள் - தெரிந்து தெளிதல்

பெருமைக்கும்  ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் அறிவதற்கு அவரின் செயல்களே உரைக்கும் கல்லாகும். மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள அவர்கள் செய்யும் செயல்களை கொண்டே அவர்கள் எப்படியான தரம் கொண்டவர்கள் என்பதை அறிந்து விட முடியுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

51/504:திருக்குறள்- தெரிந்து தெளிதல்

குணம்நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.ஒருவர் குணங்களையும் குற்றங்களையும் பார்த்து அவற்றுள் மிகுதியை கண்டு அவரை அறியவேண்டும். மனிதர்களின் குணங்களை அறிய அவர்கள் என்ன விதமான குற்றங்களை வாழ்வினில் புரிந்திருக்கின்றார்கள் என அறிந்தே அந்த குற்றங்கள் சமுதாயத்தில் எந்த விதமானவை என புரிந்து கொண்டே அவர்கள் ஆபத்தானவர்களா இல்லையா என தீர்மானத்து கொண்டே நல்லவர்களா கெட்டவர்களா என்ற முடிவுக்கு வந்த பின்னரே ஒரு தெளிவான முடிவெடுக்கவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .