Posts

71/710:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கோல் கண்ணல்லது இல்லை பிற.கூறிய அறிவுடையோர் என்பவர்க்கு அளவு கோலாவது பிறர் கண்ணே தவிர வேறில்லை.சிறந்த அறிவுடையோருக்கு மனிதர்களின் இதயங்களில் இருக்கும் நினைவுகளை அளப்பதே அவர்களின் கூரிய ஞானக்கண்கள்தான் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

71/709:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.பகையா நட்பா என்பதைக் கண்ணே சொல்லி விடும் கண்ணின் தன்மை அறிந்தவர்க்கு. பார்க்கும் பார்வைகளின் இருந்தே அறிந்து கொள்ளலாம் அந்த பார்வைகள் பகையானதா அல்லது நட்ப்பானதா என்பதை விழிகளின்மொழிகளை அறிந்தவர்களுக்கு அறிந்து கொள்ள முடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

71/708:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
முகம்நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்.மனதில் உள்ளதை குறிப்பால் உணர்ந்து அவற்றிற் கேற்ப செய்வார் முகம் பார்த்து நின்றாலே துன்பம் நீங்கும் . மனிதர்களின் உள்ளத்திலிருப்பதை அறிந்து தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றப்போல் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொடுப்பவரின் முகத்தைப்பார்த்து வாழ்ந்தாலே மனிதர்களின் துன்ப துயரங்கள் நீங்கி விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

71/707:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந்துறும்.ஒருவன் மகிழ்ச்சியையும் வெறுப்பையும் மலர்ந்தும் வாடியும் முந்திக்காட்டும் முகம் கோல் அறியும் திறம் மற்றவற்றிக்கு இல்லை.மனிதர்களின் இதயத்தில் இருக்கும் வேதனையையும் மகிழ்சியையும் சிறப்பாக மற்றவர்களுக்கு காட்டுவதில். முகத்தை தவிர சிறந்தது எதுவுமில்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

71/706:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.எதிர் உள்ள பொருளை காட்டும் கண்ணாடி போல் ஒருவன் உள்ளத்திலிருப்பதை அவன். முகம் காட்டும்.முகத்தை காட்டும் கண்ணாடியை போல் மனிதர்களின் இதயத்திலிருப்பதை அவர்களின் முகமே காட்டிக்கொடுத்துவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

71/705:திருக்குறள்:குறிப்பறிதல்

Image
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினைள் என்ன பயத்தவோ கண்.முகங்கண்டு உள்ளக் குறிப்பினை அறியவியலாதவர்க்கு கண்கள் இருந்தும் பயன் என்ன ? மனிதர்களின் முகபாவனைகளைக்கண்டு அவர்களின் உள்ளத்தை அறிந்து கொள்ளாத பார்வையுள்ள கண்கள் முகத்தில் இருந்தும் அதனால் என்ன பயன் ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

71/704:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. குறிப்பை கூறாமலே அறிய வல்லவர்க்கும் அவ்வாறு அறியவியலாதார்க்கும் உடலளவில் மட்டும் ஒற்றுமை இருக்கும்.மனிதர்கள் பார்வைக்கு ஒரே மாதிரி இருந்தாலும் ஒருவர் ஒரு குறிப்பை கூறாமலே புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவரும் அது இல்லாதவரும் அறிவனாலும் புத்திகூர்மையாலும் வேறு பட்டவர்களெயென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.