Posts

78/780:திருக்குறள்-படைச்செருக்கு

Image
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள் தக்கது உடைத்து. தனக்கு செய்த நன்றிக்காக அரசர் கண்ணீர் விடும்படி சாவக் கூடுமானால் இதுபோன்ற சாவை பிச்சையெடுத்தாவது பெற வேண்டும்.நாட்டுக்காக செய்த தியாகத்தை நினைத்து ஆட்சியாளர்களும் படைத்தலைவர்களும் கண்ணீர் விடும்படியான உயிரிழப்பு அமையுமானால் அது போன்ற உயிரிழப்பை யாசித்தாவது பெற்றுக்கொள்வதே சிறந்தாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

78/779:திருக்குறள் -படைச்செருக்கு

Image
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரோ பிழைத்தது ஒறுக்கிற் பவர்.செய்த வஞ்சினத்திற்காக போரில் உயிர்விடுவரை குறை கூறி இகழுபவர் யார் ? இலட்சியத்துக்காக போர்களத்தில் உயிரை அர்ப்பணிக்கும் போர்வீரனுக்கு குறைபாடுகள் யாராலும் கூறமுடியுமா ? முடியாது என்பதே அதன் பதிலாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

78/778:திருக்குறள்-படைச்செருக்கு

Image
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர்.போரை விரும்பி உயிரை விட அஞ்சாத வீரர்மீது அரசன் சினம் கொண்டாலும் அவர்கள் புகழ் குன்றாது. படைத்தலைவர்கள் படைகள் மீது கோபம் கொண்டு குறைகண்டுபிடித்தாலும் போர்களத்தில் போரை விரும்பி உயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கே பெருமையும் புகழும் அழியாமல் இந்த உலகில் நிலைத்து நிற்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

78/777:திருக்குறள்-படைச்செருக்கு

Image
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் சுழல்யாப்புக் காரிகை நீர்த்து. புகழை விரும்பி உயிரை விரும்பாத வீரர் கழல் அணிவது அழகுத் தன்மையுடையது. சமுதாயத்தில் புகழை விரும்பி உயிரை விரும்பாமல் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் வீரம் செறிந்த வீரம் தனிச் சிறப்புடையதென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

78/776:திருக்குறள்-படைச்செருக்கு

Image
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன் நாளை எடுத்து. வீரர்கள் உடலில் புண்படாத நாட்கள் பயனிலா நாட்களாக எண்ணுவர். போர்வீரர்கள் போருக்கு சென்று காயம் பட்ட நாட்களையே வாழ்நாளில் சிறந்த நாட்களாக கருதுவார்கள் தங்களின் உடலில் காயம் ஏற்படாத நாட்கள் எந்த பயனையும் அழிக்காத நாட்களாகவே கருதுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

78/775:திருக்குறள்-படைச்செருக்கு

Image
விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்கணவர்க்கும் எதிரி வேல் எரியும்போது கண் இமைத்தால் கூட புறமிட்டு ஓடுவதற்கு சம்மென்று வீரர் எண்ணுவர். போர்களத்தில் எதிரிகளின் தாக்குதல்களுக்கு பயந்து விழி இமைத்தால் கூட போர்வீரர்களுக்கோ அல்லது ஆயுதங்களுக்கோ பயந்தே களத்தை விட்டு பிற முதுகு காட்டி ஓடுவது போலகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

78/774:படைச்செருக்கு திருக்குறள்

Image
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். தன் கையிலிருந்த வேலினை முதலில் வந்த யானை மீது எரிந்துவிட்டு அடுத்து வரும் யானையின் மேல் எரிய தன் உடம்பில் தைத்திருக்கும் வேல் கிடைத்தற்கு மகிழ்வான்.கரங்களில் இருந்த அம்பை எதிரிபடைகளின் யானை மீது எய்த வீரன் தன்னிடம் வேறு அம்புகள் இல்லாதை கண்டு தன் உடலில் பாய்ந்திருக்கும் அம்பு ஒன்று இருப்பதை நினைத்து அனந்தமடைவானென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.